செய்திகள் :

விடாமுயற்சி டிரைலர் எப்போது?

post image


நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்பட டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

இதையும் படிக்க: சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சர்ச்சைக்கு இளையராஜா பதில்!

டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேக்டவுன் (breakdown) என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல்போல் தெரிகிறது.

இந்த நிலையில், படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று (ஜன. 1, 2025) வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சர்ச்சைக்கு இளையராஜா பதில்!

இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தரிசன சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். ஜீயர்... மேலும் பார்க்க

புஷ்பா - 2 பீலிங்ஸ் பாடல் விடியோ!

புஷ்பா - 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடலின் விடியோ வடிவம் வெளியாகியுள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 1300 கோடி வரை வசூலித்து ப... மேலும் பார்க்க

சூரி - ஐஸ்வர்யா லட்சுமி படத்தின் பெயர் போஸ்டர்!

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களில் நாயகனாக நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால், இனி கதாந... மேலும் பார்க்க

பரோஸ் தமிழ் டிரைலர்!

நடிகர் மோகன்லால் இயக்கியுள்ள பரோஸ் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.மலையாளத்தில் 40 ஆண்டுகள் நடிகராக இருக்கும் மோகன்லால், பரோஸ் என்கிற 3டி படத்தை இயக்கியுள்ளார். இதில் மீரா ஜாஸ்மின், குருச... மேலும் பார்க்க

ஜாகிா் ஹுசைன் மறைவு: மோடி இரங்கல்

பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன்(73) இதயம் சம்பந்தப்பட்ட உடல் நல பாதிப்பால், அமெரிக்காவின் சான் பி... மேலும் பார்க்க

சூர்யா - 45 படத்தில் பிரபல நடிகர்கள்!

சூர்யா - 45 படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர்.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷா, ஸ்சு... மேலும் பார்க்க