சிம்பிளாக நடந்த சிவாஜி கணேசன் பேரன் நிச்சயதார்த்தம்; மணப்பெண் இவர் தான்
சூரி - ஐஸ்வர்யா லட்சுமி படத்தின் பெயர் போஸ்டர்!
நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களில் நாயகனாக நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால், இனி கதாநாயகனாக நடிக்கவே அவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது நாயகனாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில், விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாகவும் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: பரோஸ் தமிழ் டிரைலர்!