`இனி யாசகம் செய்யக் கூடாது; மீறிச் செய்தால்...' - கடும் உத்தரவை பிறப்பித்த இந்த...
சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சர்ச்சைக்கு இளையராஜா பதில்!
இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தரிசன சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். ஜீயர்களுடன் இளையராஜா சுவாமி தரிசனம் செய்ய சென்ற போது, வசந்த மண்டபத்தை தாண்ட அர்த்த மண்டப வாசல் அருகே நின்றார்.
அப்போது, கோயில் அர்ச்சகர் சின்ன ஜீயரிடம், வசந்த மண்டபத்தில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என கூறினார். அதை சின்ன ஜீயர் இளையராஜாவிடம் கூறியதும், அவர் அர்த்த மண்டப வாயிலில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிக்க: தாமதமாகும் இளையராஜா பயோபிக்! என்ன காரணம்?
இதனால், இளையராஜாவை கருவறைக்குள் விடாமல் அவமதிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. அதேநேரம், கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டதாகவும் இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் வழிபட்டு மன நிறைவுடன் சென்றார் என ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், இளையராஜா தன் எக்ஸ் தள பக்கத்தில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.” என இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.