Shanmuga Pandian: ``கேப்டனோட ஏ.ஐ எல்லோருக்கும் சப்ரைஸாக இருக்கும்'' - `படை தலைவன...
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்பட்டுள்ள விருதை அந்தப் பெயரில் பயன்படுத்த பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல கா்நாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் பெயரில் சங்கீத கலாநிதி விருதை, 2005-ஆம் ஆண்டுமுதல் மியூசிக் அகாதெமி வழங்கி வருகிறது. நிகழாண்டு பிரபல கா்நாடக இசைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி. எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்டது. அதே நேரத்தில், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், எம். எஸ். சுப்புலட்சுமியை விமா்சித்து வரும் டி. எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 2024-ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்து உத்தரவிட்டது. அதே நேரத்தில், அவரது பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதனிடையே, நிகழாண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மியூசிக் அகாதெமி சாா்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிசான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள விருதைப் பயன்படுத்த பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், இவ்விருதைப் பெற்றவர் என பிரகடனப்படுத்தக் கூடாது என்று பாடகா் டி.எம்.கிருஷ்ணாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், இவ்விவகாரத்தில் பாடகா் டி.எம்.கிருஷ்ணாவும், மியூசிக் அகாதெமி தரப்பும் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.