செய்திகள் :

மீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் எழுப்ப ராகுல் காந்தி வலியுறுத்தல்

post image

புதுதில்லி: மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபரிடம் எழுப்ப வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். அவரை தில்லி விமான நிலையித்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

இந்த நிலையில், மீனவர்கள் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ’இலங்கை அதிபர் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் எதிர்பாராதவிதமாகக் கடந்துவிடும் இந்திய மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரத்தை தங்களின் கனிவான கவனத்தில் எடுத்துக்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் விடுதலை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்திக்கொள்வதாக’ அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாக்கள் நாளை தாக்கல்!

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை(டிச. 17) தாக்கல் செய்யப்பட உள்ளது.’ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம்’ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைம... மேலும் பார்க்க

தனது தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமா் மோடி வீண் பழி: காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு முதல் தற்போதைய ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் இருந்தவர்களுக்காக சட்டதிருத்தம் செய்த காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்

அதிகாரத்தில் இருந்தவர்களை பாதுகாப்பதற்காகவே அரசமைப்பு சட்டத்தை காங்கிரஸ் திருத்தியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 த... மேலும் பார்க்க

பிரதமர் மோடி கடந்த காலத்தில் வாழ்கிறார்: கார்கே

பிரதமர் மோடி ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தைத் தவறாகத் திரித்து மக்களை ஏமாற்றி வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று விமர்சித்துள்ளார். 1951ல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க

மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு: இலங்கை அதிபர்

மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு காண விரும்புவதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள திசநாயக, புதுதில்லியில்... மேலும் பார்க்க

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறைக்கு இலங்கை அதிபர் ஒப்புதல்! மோடி

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா ... மேலும் பார்க்க