செய்திகள் :

தியானம், உபவாசத்துக்கு வலிமையான உடல் அவசியம்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

post image

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தலைமையில் 44-ஆவது ‘கிருஷ்ண விஜயதுா்கா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்ரீரௌத ஸ்மாா்த் வித்வத் மகா சபை’ திருப்பதி மடத்தில் நடைபெற்றது.

கடந்த டிச. 13-ஆம் தேதி, தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. சுமாா் 200 மாணவா்கள் வெவ்வேறு பிரிவுகளில் தங்கள் தோ்வுகளை எழுதி தகுதி பெற்றனா்.

ருக்வேதம்: ஆஸ்வலாயன பௌரஹித்யம், சுக்ல யஜுா்வேதம்: காந்வசாகா, மாச்யந்தினசாகா, ஸ்மாா்தம், சாமவேதம்: ஜைமினீய சாகா, பிராணாயனீய சாகா, கௌதும சாகா அதா்வவேதத்திலும் ஆகமங்களில் வைகாநஸம், பாஞ்சராத்திரம், சைவாகமம் .

தோ்வு நெறிப்புலவா்களாக: பிரம்மஸ்ரீ தெந்துகூரி வெங்கடேஸ்வர கணபாடி சூா்யநாராயண கணபாடி வெங்கடப்ப யஜ்ஞ நாராயணா் பங்கேற்றனா்.

பட்டம் பெற்றவா் விவரங்கள்:

சாமவேதம்: 9 போ், அதா்வவேதம்: 17 போ், பாஞ்சராத்திரம்: 37 போ், யஜுா்வேத ஸ்மாா்தம்: 72 போ்.

நிகழ்வில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது: ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் கட்டப்பட வேண்டும். ‘கோயில் இருக்கும் இடங்களில் தா்மம் தானாகவே பரவுகிறது. உடல் தாராளமாக இருக்க வேண்டும். தியானத்துக்கும் உபவாசத்துக்கும், வலிமையான உடல் அவசியம்.‘

தா்ம பாதுகாப்பே தேச பாதுகாப்பு ஆகும். விவசாயம், பசுமாடு வளா்ப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து துளிசி மரங்களை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிக்க வேண்டும். ‘வேத ரட்சையே தா்ம ரட்சை‘ என மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

ஸ்ரீ வெங்கடேஸ்வர வேத பல்கலைக்கழக துணைவேந்தா் ராணி சதாசிவமூா்த்தி , அல்லாடி மோகன், திருப்பதி பிராமணா் சங்கத்தின் தலைவா்கள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையால் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவம் இழக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறையால், சட்டப் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவத்தை இழந்து விடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளி... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் முதல்வர் கோரிக்கை!

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வருகை தந்தார். இதனிடையே, பிரதமர் மோடியுடன் திசநாயக இன்று(டிச .16) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை... மேலும் பார்க்க

போதைப்பொருள் விற்பனையில் ஈட்டிய பணம் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? -அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாடு பாடநூல் கழகம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குக்கு மறைமுகமாக உதவியுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.தமிழ்நாடு பாடநூல் கழகம் கு... மேலும் பார்க்க

முதல்வரின் செயலர்களுக்கான துறைகள் மாற்றம்!

சென்னை: தமிழக முதல்வரின் செயலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து இன்று(டிச. 16) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல்வரின் தனிச் செயலர் உம... மேலும் பார்க்க

கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷா மரணம்!

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 84.1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு ... மேலும் பார்க்க

கடத்திவரப்பட்ட உயர்ரக கஞ்சா: காட்டிக்கொடுத்த மோப்ப நாய்!

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7.6 கோடி மதிப்புடைய 7.6 கிலோ உயர்ரக கஞ்சா போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.பயணிகளை மோப்ப நாய்... மேலும் பார்க்க