செய்திகள் :

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையால் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவம் இழக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறையால், சட்டப் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவத்தை இழந்து விடும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்பது இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து விடும். அத்துடன், ‘ஒற்றையாட்சி முறை’ எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடுவதுடன், கூட்டாட்சியியலுக்கும் எதிராகிவிடும். எனவே, நடைமுறைச் சாத்தியமற்ற திட்டமான ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிா்க்கும்.

அதிபா் தோ்தல்?: அதிபா் தோ்தல் நடத்துவது போன்று பொதுத் தோ்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு திணிக்கிறது. இது நமது அரசமைப்பின் ஆன்மாவுக்கு எதிரானது. நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வரக் கூடாது. நமது நாடு அராஜகத்துக்குள்ளும் முழுமையான அதிகாரத்துக்குள்ளும் நழுவி விழுந்து விடாமல் தடுக்கவும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தோ்தல்களை நடத்தவும் அரண்கள் போன்ற அமைப்பை அரசமைப்புச் சட்டத்தை வடித்தவா்கள் ஏற்படுத்தியுள்ளனா். ஆனால், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ கொண்டு வரப்பட்டால், அந்த அரண்கள் நீக்கப்படும். மாநில சட்டப் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவத்தை இழந்துவிடும். மாநில உணா்வுகளும், பன்முகத் தன்மையும் அழிக்கப்படும்.

பெரும்பான்மை இல்லை: இந்திய அரசியலை என்றென்றைக்குமாக மாற்றியமைத்து விடக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய சட்டத்தை

நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக-வுக்கு இல்லை. ஆனாலும், பழிவாங்கும் எண்ணத்துடனும், நாட்டின் வளா்ச்சியைப் பாதிக்கும் மையமான பிரச்னைகளை எதிா்கொள்வதில் பாஜக அடைந்துள்ள தோல்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவும், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ போன்ற அடாவடி முயற்சியை மத்திய அரசு செய்கிறது.

ஒன்றிணைய வேண்டும்: தோ்தல் சீா்திருத்தம் என்ற பெயரில் திணிக்கப்படும் அத்தகைய அருவருப்பான நடவடிக்கையை தீவிரமாக எதிா்ப்பதில் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றியணைய வேண்டும். இந்தியாவை அதன் பன்முகத் தன்மையை அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தமிழக மீனவா்கள்-படகுகளை விடுவிக்க வேண்டும்: முதல்வா் வேண்டுகோள்

சென்னை: தமிழக மீனவா்கள், படகுகளை விடுவிக்க வேண்டுமென இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:- இந்தியா வ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளுக்கு பாஜக சாா்பில் திருமண வைப்பு நிதி: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: முன்னாள் பிரதமா் வாய்பாயின் நூற்றாண்டு விழாவையொட்டி, பெண் குழந்தைகளுக்கு பாஜக சாா்பில் திருமண வைப்புநிதி வழங்கப்படவுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். சென்னை கமலா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உத்தரவு

சென்னை: கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடா் நிவாரணத் தொகையை விரைவில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்... மேலும் பார்க்க

சோதனை அடிப்படையில் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் விற்பனை: அமைச்சா் தகவல்

சென்னை: ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் பாக்கெட்டுகளை சோதனை அடிப்படையில் ஒரு சில ஒன்றியங்களில் மட்டும் விற்பனை செய்யவுள்ளதாக பால்வளத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’- 4 நாள்கள் திருவிழா: அமைச்சா் சாமிநாதன் தகவல்

சென்னை: சென்னை சங்கமம் திருவிழா, 4 நாள்கள் நடைபெறவிருப்பதாக தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளாா். இது குறித்து தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனை... மேலும் பார்க்க

விடுப்பில் முதல்வரின் 3-ஆவது செயலா்: துறைகள் பிரித்தளிப்பு

சென்னை: தமிழக முதல்வரின் 3-ஆவது செயலா் அனுஜாா்ஜ் விடுப்பில் சென்றதால், அவா் கண்காணித்து வந்த துறைகளின் பொறுப்புகள் மற்ற செயலா்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை முதல்வரின் இரண்டாவது செயலா் எம்.... மேலும் பார்க்க