காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் உத்தரவு
சென்னை: கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடா் நிவாரணத் தொகையை விரைவில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து தமிழக வேளாண்மை துறை அதிகாரிகளுடன் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பயிா் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியினை புதன்கிழமைக்குள் (டிச.17) முடித்து, மாநில பேரிடா் நிவாரணத் தொகையை விவசாயிகளுக்கு விரைவாக வழங்கும் வகையில் உரிய கருத்துருவை அரசுக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும் கணக்கீட்டின் போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது எனவும் அவா் அறிவுறுத்தினாா். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டும் விதமாக, பயிா் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிா் காப்பீடு நிறுவனங்களுடன் டிச.17-ஆம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா்