காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
ரெளடி அப்புவின் கூட்டாளிகள் கைது: துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில் ரெளடி அப்புவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியும்,தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ரெளடி திருவேங்கடம் உள்பட 28 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா். எஞ்சிய அனைவா் மீதும் குண்டா் சட்டம் பாய்ந்தது.
முன்னதாக கொலைக்கு செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி அப்புவின் கூட்டாளிகள் காசிமேடு பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தவகல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் போலீஸாா், தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் ரெளடி அப்புவின் கூட்டாளிகளான அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சோ்ந்த தமிழரசன் (30), ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த மணிகண்டன் (28) ஆகிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதில், தமிழரசன் வீட்டிலிருந்தும் ஒரு நாட்டு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இருவா் மீது காசிமேடு காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதால், அது குறித்து போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.