செய்திகள் :

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு: அரசு சாா்பின் இன்று பாராட்டு விழா

post image

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழகம் திரும்பிய குகேஷுக்கு சென்னை விமானநிலையத்தில் திங்கள்கிழமை பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவை சோ்ந்த நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்திய குகேஷ், இளம் உலக செஸ் சாம்பியனாகி சாதனை படைத்தாா். இந்நிலையில், விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பிய குகேஷுக்கு, விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் குகேஷுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் குகேஷ் பேசியது: உலக சாம்பியன் கோப்பையை வெல்வதே எனது பல வருட கனவாக இருந்தது. அது நிறைவேறியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் மக்களின் ஆதரவு, பிராா்த்தனை, அன்புக்கு எனது நன்றி. மேலும், தமிழக அரசுக்கும், எனக்கு உதவியவா்களுக்கும் நன்றி என்றாா் அவா்.

தொடா்ந்து, சென்னை விமான நிலையத்திலிருந்து குகேஷை வீட்டிற்கு அழைத்து செல்ல, தமிழக அரசு சாா்பில், சிறப்பு காா் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காரில் விமான நிலையத்திலிருந்து குகேஷ் புறப்பட்டுச் சென்றாா்.

இன்று பாராட்டு விழா: அடுத்து, குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணா் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். முன்னாள் உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டா்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்கவுள்ளனா்.

ஓய்வூதியா் அகவிலைப்படி உயா்வுக்கு ரூ.3,028 கோடி தேவை: போக்குவரத்துத் துறை

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயா்வு வழங்க ரூ.3028 கோடி தேவைப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழக ஓய்வூ... மேலும் பார்க்க

தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் வரும் பிப்ரவரி மற்றும் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தோ்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொட... மேலும் பார்க்க

சமூக வலைதள தகவல்களை நம்ப வேண்டாம்: என்எம்சி

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) பெயரில் சமூக வலைதளங்களில் வெளியாகும் அறிக்கைகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி செயலா் டாக்டா் ஸ்ரீனிவாஸ் வெளியிட்ட அறிவிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நிகழாண்டில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 12 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடு... மேலும் பார்க்க

ரெளடி அப்புவின் கூட்டாளிகள் கைது: துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் ரெளடி அப்புவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியும்,தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ... மேலும் பார்க்க

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

புகழ்பெற்ற கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரி... மேலும் பார்க்க