`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணா...
Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இந்தியர்கள் பலி!
ஜார்ஜியா நாட்டில் சுற்றுலா நகரமான குடெளரி என்ற பனிமலை பிரதேசத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குடெளரி நகரில் உள்ள ஸ்கை ரிசார்ட்டில் உள்ள உணவகத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதிகள் நிறைந்த அறைகள் உண்டு.
அந்த ரெஸ்டாரண்ட் இந்தியரால் நடத்தப்பட்டு வந்தது. ரிசார்டில் திடீரென இரவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே, மின்சாரத்திற்காக அங்கிருந்த ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. ஜெனரேட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைட் அருகில் உறங்கிக்கொண்டிருந்தவர்களின் அறைகளுக்குள் புகுந்தது. இதனால் ரெஸ்ராண்டின் 2-வது மாடியில் ஓய்வு எடுக்கும் பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த இந்தியர்கள் 12 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவரும் இந்தியவர்கள் என்பதுடன் அந்த ரெஸ்டாரண்டில் வேலை செய்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, ஜார்ஜியா உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. இறந்தவர்களின் உடம்பில் எந்தவித காயமும் இல்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது. அதோடு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று ஜார்ஜியா அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தடயவியல் ஆய்வுக்கும் ஜார்ஜியா அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஜார்ஜியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்திய தூதரம் இம்மரணம் குறித்து அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளது.
அதோடு இறந்தவர்களின் குடும்பத்தை தொடர்பு கொண்டிருப்பதாக ஜார்ஜியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
விறகு, அடுப்பு, ஜெனரேட்டர் மூலம் வெளியாகும் கார்பன்மோனாக்சைட் மனிதர்களின் உடம்பில் புகுந்து ஆக்ஸிஜன் செய்யவேண்டிய வேலையை செய்யவிடாமல் தடுத்து விடுகிறது. இதனால் மூளை, இதயம் சரியாக செயல்படமுடியாமல் போய் உயிரிழக்க நேரிடுகிறது.