செய்திகள் :

அரசு நலத்திட்டங்கள்: பெண்களிடம் லஞ்சம் வாங்கிய `சமூக நல அலுவலர்'... வைரல் வீடியோவால் பரபரப்பு!

post image

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், வறிய நிலை மக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் பல்வேறுத் திட்டங்களை, தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை செய்து வருகிறது.

குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, தொட்டில் குழந்தைத் திட்டம், குழந்தை தத்தெடுப்பு, திருமண நிதி உதவித் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்துகிறது.

லஞ்சம்

இந்த திட்டங்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சமுக நலத்துறை அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு செய்து கொடுப்பதற்கு லஞ்சம் வாங்குவதாக வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக நல விரிவாக்க அலுவலரின் இந்த செயலை கண்டித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஷீலாசுந்தரியிடம் விளக்கம் கேட்டு பேசினோம். அப்போது அவர், "ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக மேக்தா மேரி என்பவர் பணியாற்றி வருகிறார். தமிழக அரசு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தும் திட்டங்களை பயனாளிகளுக்கு செய்து கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக உடனேயே, துறைரீதியான விசாரணை நடத்திட உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் சமூக நலத்துறை இணை இயக்குனர் நேரடியாக வந்து ராஜபாளையம் அலுவலகத்தில் பயனாளிகளிடம் விசாரணை நடத்தினார். புகாருக்குள்ளான சமுக நல விரிவாக்க அலுவலர் மேக்தா மேரியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

வீடியோ காட்சி

இதையடுத்து அவர் மீது துறைரீதியான மேல் நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். இந்தநிலையில்தான், இந்த விவகாரம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அரசு திட்டங்களை உரியவர்களுக்கு கொண்டு சேர்ப்பதே அரசு அலுவலர்களின் கடமை. ஆகவே கடமையைச் செய்ய யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது தவறினாலோ அதுகுறித்து உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

`இனி யாசகம் செய்யக் கூடாது; மீறிச் செய்தால்...' - கடும் உத்தரவை பிறப்பித்த இந்தூர் மாவட்ட நிர்வாகம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்ட நிர்வாகம், யாசகர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க ஜனவரி 1 முதல் புதிய முயற்சியில் இறங்கவிருக்கிறது. அதாவது, இந்தூர் நகரில் ஜனவரி 1 முதல் யாசகர்களுக்கு யாராவது யாச... மேலும் பார்க்க

Ilaiyaraja: `இவர்கள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை' - இளையராஜா விவகாரத்தில் அறநிலையத்துறை

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்குச் சென்ற இசைஞானி இளையராஜா கோயில் கருவறைக்குள் நுழைய முயன்றபோது ஜீயர் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித... மேலும் பார்க்க

இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர்... அமைச்சர்களுடன் பேசியதென்ன?

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றப் பிறகு, அனுரகுமார திஸாநாயக்க முதல் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்திருக்கிறார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.... மேலும் பார்க்க

சாலையில் ஓடும் கழிவுநீர்; துர்நாற்றத்தால் முகம் சுளிக்கும் மக்கள்-கண்டுகொள்ளுமா காரைக்குடி நகராட்சி?

கடந்த ஒரு வாரமாக காரைக்குடியில் பெய்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி, குடியிருப்புப் பகுதிகள் குளம் போல காட்சியளிக்கிறது. அதே போன்று பாதாள சாக்கடைக... மேலும் பார்க்க

சுட்டிக்காட்டிய விகடன்; மத்திய கைலாஷ் சாலையில் மூடப்பட்ட வடிகால்; நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான வல்லபாய் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அடையார் மற்றும் டைடல் பார்க் பகுதிகளிலிருந்து இருந்து வரும் வாகன... மேலும் பார்க்க