Mufasa - The Lion King: அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர்... குரல் கொடுத்தவர்கள...
பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 900 புள்ளிகள் குறைந்தது!
பங்குச்சந்தைகள் இன்று(டிச. 17)சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,511.81 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
காலை 11.50 மணியளவில், பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 925.58 புள்ளிகள் குறைந்து 80,822.99 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 276.70 புள்ளிகள் குறைந்து 24,391.55 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... ஒரு அயோத்தி போதாதா?
சென்செக்ஸ் பொருத்தவரை 30ல் 29 பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. அதானி போர்ட்ஸ் நிறுவனம் மட்டுமே ஏற்றத்தைக் கண்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், எல்&டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
நிஃப்டியை பொருத்தவரை 50ல் 46 பங்குகள் விலை குறைந்தன. அதானி போர்ட்ஸ், சிப்லா, டாடா மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன. இதர நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளது.