3-ஆவது டெஸ்ட்: இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ராகுல் - ஜடேஜா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டின் 4-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் சேர்த்துள்ளது.
இன்றைய 4-ஆவது நாள் ஆட்டத்தில் களத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்ட கே.எல்.ராகுல் - ரவீந்திர ஜடேஜா அணியை சரிவுப் பாதையிலிருந்து மீட்டனர். சதத்தை தவறவிட்ட ராகுல் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அரைசதம் கடந்து அசத்திய ஜடேஜா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி 16 ரன்களுக்கும், முகமது சிராஜ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோச் ஹேஸில்வுட், நாதன் லியோன் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
நாளை(டிச. 18) கடைசி நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஒருவேளை ஃபாலோ ஆன் பெற்று இந்திய அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் நிலைத்து நின்று விளையாடினால் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிய வாய்ப்பு அதிகமுள்ளதாகவே தெரிகிறது.