செய்திகள் :

ஆகாஷ் தீப், பும்ரா அதிரடியால் ஃபாலோ-ஆன் தவிர்ப்பு..! இந்திய வீரர்கள் கொண்டாட்டம்!

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தை தாண்டியதை கோலி, ரோஹித் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினார்கள்.

ராகுல் 84 ரன்களுக்கும் ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

ஆட்டத்தின் பல்வேறுமுறை மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது.

இறுதியில் பும்ரா (10)- ஆகாஷ் தீப் (27) கூட்டணி அதிரடியாக விளையாடியதால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. 252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டதுக்கு இந்திய வீரர் கோலி, பயிற்சியாளர்கள் கொண்டாடிய விடியோ வைரலாகி வருகிறது.

கம்மின்ஸ் 4, ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். கம்மின்ஸ் ஓவரில் பவுண்டர் ஆகாஷ் தீப் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அசத்தினார்.

பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி எங்கள் திட்டத்தை முறியடித்தது: ஆஸி. பயிற்சியாளர்!

பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி எங்கள் திட்டத்தை முறியடித்தது என்று ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வ... மேலும் பார்க்க

ரன் குவிப்பின் மந்திரம் என்ன? கே.எல்.ராகுல் பேட்டி!

பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து வெற்றிகரமாக 252/9 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமான கே.எல்.ராகுல் பேட்டிங்கின் தான் செய்தது என்னவென்று பேட்டியளித... மேலும் பார்க்க

மகளிர் டி20, ஓடிஐ தரவரிசை: ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

மகளிர் டி20, ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்களுக்கு எதிராக சிறப... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் சாதனை படைத்த பாட் கம்மின்ஸ்!

ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட்டில் இந்திய வீரர்களான ரி... மேலும் பார்க்க

423 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. இமாலய வெற்றி: விடைபெற்றார் டிம் சௌதி!

இங்கிலாந்து அணியை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவந்தது.இந்தத் த... மேலும் பார்க்க

ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகல்!

ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முழங்கால் தசைப்பிடிப்பு காரணமாக பார்டர் - கவாஸ்கர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்... மேலும் பார்க்க