Gukesh: செஸ் சாம்பியன் குகேஷ்; வரவேற்று அழைத்துச் சென்ற உதயநிதி - பாராட்டு விழ...
BB Tamil 8: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராணவ்; ஸாரி கேட்க மறுக்கும் சௌந்தர்யா
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் பைனல் வாரமே வந்துவிடும்.
இதனால் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கற்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க். அதில் ஜெஃப்ரியும் பவித்ராவும் இணைந்து தங்களுக்கான கற்களைக் காப்பாற்றும்போது ராணவ் அதைத் தடுக்கிறார். அப்போது ராணவை ஜெஃப்ரி தள்ளிவிட அவருக்கு தோள்பட்டையில் அடிபட்டிருக்கிறது.
அதனால் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் கன்டென்ட்டிற்காக நடிக்கிறார் என ஜெஃப்ரி, செளந்தர்யா, அன்ஷிதா ஆகியோர் கூறியிருந்தனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அடுத்த மூன்று வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான தலைவர் விஷால் கூறுகிறார்.
பிறகு அன்ஷிதா ராணவ்விடம் 'நான் அப்படி சொல்லி இருக்கக்கூடாது ஸாரி ராணவ்' என்று மன்னிப்புக் கேட்கிறார். சௌந்தர்யா' நீ உன்னை தெரிய வைக்கிறதுக்கு தான் இப்படி பண்ணுற என்று நினைத்தேன்' என்கிறார்.
உடனே ராணவிற்கும், சௌந்தர்யாவிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்பு சௌந்தர்யா, ஜெஃப்ரியிடம் `எனக்கு ராணவ்விடம் ஸாரி கேட்க தோணல' என்கிறார். இன்றைய எபிசோடில் முழுமையாக என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.