செய்திகள் :

ஆப்கன் - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து!

post image

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

டி20 போட்டியில் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான் அணி இன்று (டிச.17) முதலாவது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான சாம் கரன், டாம் கரன் அவர்களின் சகோதரர் பென் கரன் ஜிம்பாப்வே அணியில் அறிமுகமானார். அதன்படி, பென் கரன் மற்றும் மருமானி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

பென் கரன் 15 ரன்னிலும், மருமானி 6 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். மழையால் ஆட்டம் 28 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணி 9.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

அஸ்மத்துல்லா ஒமர்சாய் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஹேலி மேத்யூ அதிரடி: மே.இ.தீவுகள் அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நவி மும்பையில் டிஒய் பாட்டீல் மைதானத்தி... மேலும் பார்க்க

சதமடித்தவருக்கு அறிவுரை ஏன்? கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆவேசம்!

விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கோலிக்கு மட்டும் அறிவுரை கூறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விராட் கோலி சமீபத்தில் பெரும்பாலான போட்டிகளில் ஆஃப் - சைடு செல்லும் பந்தினை கவர... மேலும் பார்க்க

விஜய் ஹசாரே கோப்பை: மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்!

விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், தில்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான பிரித்வி ஷா விஜய் ஹசாரே கோப்பைக்... மேலும் பார்க்க

வர்ணனையாளர்கள் பாராட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேட்ச்!

பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் பிஜிடி தொடரின் 3ஆவது போட்டியில் கே.எல்.ராகுலை ஆட்டமிழக்க செய்த ஸ்மித்தின் கேட்ச் குறித்து ஆலன் பார்டர் புகழ்ந்து பேசியுள்ளார். 1-1 என சமநிலையில் இருக்கும் பார்டர் - கவாஸ்கர... மேலும் பார்க்க

பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி எங்கள் திட்டத்தை முறியடித்தது: ஆஸி. பயிற்சியாளர்!

பும்ரா - ஆகாஷ் தீப் கூட்டணி எங்கள் திட்டத்தை முறியடித்தது என்று ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வ... மேலும் பார்க்க

ரன் குவிப்பின் மந்திரம் என்ன? கே.எல்.ராகுல் பேட்டி!

பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3ஆவது போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்து வெற்றிகரமாக 252/9 ரன்கள் எடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமான கே.எல்.ராகுல் பேட்டிங்கின் தான் செய்தது என்னவென்று பேட்டியளித... மேலும் பார்க்க