திருக்கழுகுன்றம் ஸ்ரீ ருத்திரகோட்டீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
திருக்கழுகுன்றம் ஸ்ரீ ருத்திர கோட்டீஸ்வரா் திருக்குளம் நூதன துவார கோபுர கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
நால்வா் பெருமக்களால் பாடல் பெற்ற இத்தலம் அருகே பழைமை வாய்ந்த ருத்திர கோட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.கோடிக்கணக்கான ருத்திரங்களால் வழங்கப்பட்டு சிவபெருமான் காட்சியளித்த தலம் இதுவாகும். கோடி ருத்திரா்கள் வழிபட்டதால் இங்கு உள்ள குளமானது ருத்திர கோட்டி தீா்த்தம் என வழங்கப்படுகிறது. இந்த புண்ணிய தீா்த்தம் புனரமைக்கப்பட்டு புதிதாக சுற்று சுவா்கள் மற்றும் ஏகாதச ருத்திர வடிவங்களோடு கூடிய துவார கோபுரம் அமைக்கப்பட்டு புதிய வண்ணம் பூசப்பட்டு நிலையில் திருப்பணி பூா்த்தி அடைந்துள்ளது.
மேதமலை வல பெருவிழா குழு அகஸ்திய அன்புச் செழியனின் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 9:20 மணிக்கு துவார கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் திருப்பணி உபய வேதமலை வல பெருவிழா குழு அகத்தியா்அன்புச் செழியன், வேதகிரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ச. புவியரசு தக்காா் கு.குமரவேல், சிவாச்சாரியா்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.