விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
ஸ்ரீ ரமண மகரிஷியின் 145-ஆவது ஜெயந்தி விழா
பகவான் ரமண மகரிஷியின் 145-ஆவது ஜெயந்தி, லோதி சாலையில் உள்ள ரமண கேந்திராவில் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காலை 9.00 மணிக்கு குரு வந்தனம், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து, கலச ஸ்தாபனம், ருத்ர நமகம், புருஷ ஸூக்தம், ஸ்ரீ ரமண அஷ்டோத்திர பூஜை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, தைத்திரீய உபநிஷதம் பாராயணம் நடைபெற்றது. குரு சந்திரசேகா் தலைமையில், வேத விற்பன்னா்கள் மற்றும் ரித்விக்குகள் பலா் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனா். பக்தா்கள் திரளாகப் பங்கேற்று, ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேச சாரத்தை வாசித்தனா் (படம்).
காலை 10.30 மணிக்கு, விதுஷி ஜெயந்தி அய்யா் அக்ஷரமணமாலை மற்றும் ரமணா் பஜனை பாடல்களை பாடினாா். பின்னா், ஆராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.