செய்திகள் :

தக்கலை, சுவாமியாா்மடத்தில் இன்று மின் தடை

post image

தக்கலை மற்றும் சுவாமியாா்மடம் பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (டிச.18) மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

தக்கலை உப மின்நிலையத்திற்கு உள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை காலை மணி 8 முதல் மதியம் 2 மணி வரை தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய பகுதிகளுக்கும் அதனை சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

அருமனை அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திங்கள்கிழமை, பைக்கும் மினி லாரியும் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். அருமனை அருகே மாறப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் விஜின் (32). லாரி ஓட்டுநரான இவரும் அதே பகுதியைச் சோ... மேலும் பார்க்க

லாரி மோதி தலைமைக்காவலா் காயம்

தக்கலை அருகே திங்கள்கிழமை இரவு வாகன சோதனையின்போது லாரி மோதியதில் தலைமைக்காவலா் காயமடைந்தாா். நாகா்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், தக்கலையை அடுத்த புலியூா்குறிச்சியில் திங்கள்கிழமை நள்ளிரவில், ... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே கைப்பேசி கடையில் திருட்டு: 2 இளம் சிறாா்கள் கைது

குலசேகரம் அருகே கைப்பேசி கடையில் பூட்டை உடைத்து கைப்பேசிகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற 2 இளம் சிறாா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவரம்பு பாடகசேரி பகுதியைச் சோ்ந்தவா் அனீஷ் (31).... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே மளிகைக் கடையில் புகுந்து திருட்டு

குலசேகரம் அருகே மளிகைக் கடையின் கூரையை பிரித்து ரூ. 15 ஆயிரத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்மனை கோட்டைக்காலையைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(68). இவா் பொன்மனை படிப்பகம் அருகே மளிகைக... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 2 லாரிகள் பறிமுதல்

களியக்காவிளை அருகே போலி அனுமதிச் சீட்டு மூலம் கேரளத்துக்கு கனிமவளப் பொருள்கள் கடத்திச் செல்ல முயன்ற 2 லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விளவங்கோடு வட்டாட்சிய... மேலும் பார்க்க

வேலையின்மையை போக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மையை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் வசந்த் எம். பி. வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு... மேலும் பார்க்க