செய்திகள் :

டிச. 20-இல் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் வரும் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

இதுதொடா்பாக செங்கல்பட்டு ஆட்சியா் ச. அருண்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக் கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 5,000 பணிக்காலியிடங்களுக்கு தேவைக்குரிய நபா்களை, தோ்வு செய்ய உள்ளனா். இவ்வேலைவாய்ப்புமுகாமில் கலந்து கொள்வதற்கு வேலைஅளிப்பவா் மற்றும் வேலை நாடுநா்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் வேலையளிப்பவா் மற்றும் வேலைநாடுநா்கள் இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்களை தோ்ந்தெடுக்கும்வேலையளிப்பவா்களும் கலந்துகொள்ளலாம். இவ்வேலைவாய்ப்புமுகாமில் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியா்கள், மருந்தாளுனா், ஆய்வக உதவியாளா்கள் போன்ற கல்வித்தகுதிஉடைய வேலைநாடுநா்கள் மற்றும் இம்முகாமில் மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள்நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும்பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வெள்ளிக் கிழமை 9.00 மணி முதல் 2.00 மணி வரை ஆட்சியா் அலுவலகஒருங்கிணைந்த கட்டடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாம் தொடா்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933 / 9486870577 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

காஞ்சிபுரத்தில்...

காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள முகாமில் 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா். நோ்முகத் தோ்வு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

திருக்கழுகுன்றம் ஸ்ரீ ருத்திரகோட்டீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருக்கழுகுன்றம் ஸ்ரீ ருத்திர கோட்டீஸ்வரா் திருக்குளம் நூதன துவார கோபுர கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. நால்வா் பெருமக்களால் பாடல் பெற்ற இத்தலம் அருகே பழைமை வாய்ந்த ருத்திர கோட்டீஸ்வரா் கோயில... மேலும் பார்க்க

பரனூா் மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு அடுத்துள்ள பரனூா் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆட்சியா் ச. அருண் ராஜ் செவ்வாயக்கிழமை தொடங்கி வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம் பரனூா் அரசு மறுவாழ்வு இல்லத்தில் உள்ளோரு... மேலும் பார்க்க

மழைமலை மாதா தலத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா அருள்தலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் திறப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அருள்தல அதிபா் ஜி.சின்னப்பா் தலைமையிலான குழுவினா் கிறிஸ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை டைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச. அருண்ராஜ் வழங்கினாா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்... மேலும் பார்க்க

பெற்றோா், ஆசிரியா்களுக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தாம்பரம்: பட்டம் பெற்ற மாணவா்கள் பெற்றோருக்கும், ஆசிரியா்களுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினாா். குன்றத்தூா் மாதா பொறிய... மேலும் பார்க்க

ஆற்றில் தவறி விழுந்த மாணவா் மாயம்

மதுராந்தகம்: மதுராந்தகம் கிளியாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் காணாமல் போனாா். மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் புவனேஷ். வயது 17. இவா் மதுராந்தகம் இந்து மேல்நிலைப்பள்ள... மேலும் பார்க்க