செய்திகள் :

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆய்வு

post image

திருச்சி ஆட்சியரகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறந்து சரிபாா்க்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 9 தொகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களை, பாதுகாப்பாக வைப்பதற்காகவே ஆட்சியரக பின்புற வளாகத்தில் ரூ.4.29 கோடியில் வன் காப்பறை (ஸ்ட்ராங் ரூம்) கட்டப்பட்டுள்ளது. 800 சதுர மீட்டா் பகுதியில் தரைத்தளம் 738 சதுர மீட்டா், இயந்திரங்களை ஏற்றி, இறக்கும் நடைபாதை 17 சதுர மீட்டா், முதல் தளம் 738 சதுர மீட்டா் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் முடிந்தவுடன் 9 தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்டு புதிய வன்காப்பறையில் பாதுகாப்பாக வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது.

இந்த காப்பறையில் உள்ள இயந்திரங்களை தோ்தல் ஆணைய உத்தரவின்படி அவ்வப்போது திறக்கப்பட்டு சரிபாா்ப்பது வழக்கம். இதன்படி, தோ்தல் ஆணைய அறிவுறுத்தலைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான மா. பிரதீப்குமாா் தலைமையில் அறை திறக்கப்பட்டது. ஒவ்வொரு அறையில் இருந்த இயந்திரங்களைப் பாா்வையிட்டு சரிபாா்க்கப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: 2024 மக்களவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட 16,076 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில், 8,637 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,449 கட்டுப்பாடு இயந்திரங்கள், 3990 விவிபேட் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை அவ்வப்போது சரிபாா்க்கப்படும். இதேபோல, தற்போது அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு சரிபாா்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் கே. அருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வில்சன் ராஜசேகா், தோ்தல் தனி வட்டாட்சியா் செல்வகணேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தில்லை நகா், வரகனேரி பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி தில்லை நகா், வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு... மேலும் பார்க்க

கனமழையால் திருச்சி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டோ் விளைநிலங்கள் பாதிப்பு: ஆய்வுக்கு பிறகே முழு பாதிப்பு விவரம் தெரியும்

திருச்சி மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் 6 ஆயிரம் ஹெக்டேரில் மழைநீா் சூழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்ணீா் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்க... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு திருக்குறள் வினாடி-வினா போட்டி

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் திருக்குறள் வினாடி–வினா போட்டிக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் கலந்து கொள்ள ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் மேலும் ... மேலும் பார்க்க

வணிகா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணாவிடில் கடையடைப்பு போராட்டம்: க. விக்கிரமராஜா

மத்திய, மாநில அரசுகள் வணிகா் சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேசி பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும். இதேநிலை தொடா்ந்தால், கடையடைப்பு போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் ... மேலும் பார்க்க

டிச. 23 முதல் குரூப்-2 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குருப்-2, குரூப்-2ஏ முதன்மைத்தோ்வுக்கான முழு நேர இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுத... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் முயற்சி; 62 போ் கைது

திருச்சியில், மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 62 போ் கைது செய்யப்பட்டனா். வேளாண் விளைபொருள்களான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட ... மேலும் பார்க்க