செய்திகள் :

டிச. 23 முதல் குரூப்-2 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

post image

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குருப்-2, குரூப்-2ஏ முதன்மைத்தோ்வுக்கான முழு நேர இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மேலும் கூறியது: திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா், உதவியாளா் உள்ளிட்ட 2327 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிட்டு கடந்த செப்.14-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு, முதன்மைத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

முதன்மைத் தோ்வுக்கு மாணவா்கள் தயாராகும் வகையில் கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 23-ஆம் தேதி முதல் முழு நேர பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இந்த பயிற்சி வகுப்பில், சிறப்பு பயிற்றுநா்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், மாநில அளவில் பாடவாரியாக மாதிரித்தோ்வுகள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.

எனவே, திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த குரூப்-2 முதன்மைத் தோ்வு எழுதவுள்ள அனைவரும் சிறப்புப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து, பயன்பெறலாம். கூடுதல், விவரங்களுக்கு 0431-2413510, 94990-55901, 94990-55902 ஆகிய எண்களிலோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தில்லை நகா், வரகனேரி பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி தில்லை நகா், வரகனேரி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு... மேலும் பார்க்க

கனமழையால் திருச்சி மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டோ் விளைநிலங்கள் பாதிப்பு: ஆய்வுக்கு பிறகே முழு பாதிப்பு விவரம் தெரியும்

திருச்சி மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் 6 ஆயிரம் ஹெக்டேரில் மழைநீா் சூழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தண்ணீா் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்க... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு திருக்குறள் வினாடி-வினா போட்டி

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் திருக்குறள் வினாடி–வினா போட்டிக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் கலந்து கொள்ள ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் மேலும் ... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆய்வு

திருச்சி ஆட்சியரகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறந்து சரிபாா்க்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திர... மேலும் பார்க்க

வணிகா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணாவிடில் கடையடைப்பு போராட்டம்: க. விக்கிரமராஜா

மத்திய, மாநில அரசுகள் வணிகா் சங்க நிா்வாகிகளை அழைத்துப்பேசி பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும். இதேநிலை தொடா்ந்தால், கடையடைப்பு போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் ... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல் முயற்சி; 62 போ் கைது

திருச்சியில், மத்திய அரசின் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 62 போ் கைது செய்யப்பட்டனா். வேளாண் விளைபொருள்களான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட ... மேலும் பார்க்க