விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் அன்புமணி வலியுறுத்தல்
நமது சிறப்பு நிருபர்
இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பை நீக்க வேண்டும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் 75-ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாநிலங்களவையில் நடைபெற்ற 2-ஆம் நாள் சிறப்பு விவாதத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
இந்தியாவில் பட்டியலினத்தவரின் மக்கள்தொகை 15 சதவீதம். அவர்களுக்கு மத்திய அரசில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பழங்குடியினரின் மக்கள்தொகை 7.5 சதவீதம். அவர்களுக்கும் அதே அளவு இடஒதுக்
கீடு வழங்கப்படுகிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை என்னைப் பொருத்தவரை 62 சதவீதமாகும். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி 54 சதவீதம். ஆனால், அவர்களுக்கு மட்டும் ஏன் வெறும் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது?
மத்திய அரசுப் பணிகளில் கிரீமிலேயர் அல்லாத ஓ.பி.சிக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், அவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டதுபோக, மீதமுள்ள இடங்களை கிரீமிலேயர்களைக் கொண்டு நிரப்பும் வகையிலும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், எந்த அரசும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினரை குறிப்பிட ஒரு பத்தி உள்ளது போல இதர பிற்படுத்தப்பட்டோருக்கு என ஒரு பத்தி சேர்க்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக 1948-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றார் அன்புமணி.
கச்சத்தீவு, இலங்கை கடற்பையினரால் கை துக்கு உள்ளாகும் தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்தும் அன்புமணி ராமதாஸ் பேசினார்.