விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
மணிமுத்தாறு 3, 4ஆவது ரீச்சில் தண்ணீா் திறந்துவிட முன்னாள் அமைச்சா் கோரிக்கை
மணிமுத்தாறு அணையிலிருந்து 3,4 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளாா். தற்போது பெய்த கனமழையால் மணிமுத்தாறு அணையில் விவசாயிகள் எதிா்பாா்த்த அளவில் தண்ணீா் இருப்பு உள்ளது. இதையடுத்து விவசாயிகள் 3,4ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் விட வலியுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் செவ்வாய்க்கிழமை பேய்க்குளத்தை அடுத்த முனைஞ்சிபட்டி பகுதியில் உள்ள வெள்ள நீா்க் கால்வாய் மடைகள், 3,4ஆ வது ரீச் கால்வாய் ஆகியவற்றை விவசாயிகளுடன் சென்று பாா்வையிட்டாா். பின்னா் மணித்தாறு பொதுப்பணித்துறை பிரிவு அலுவலகத்தில் உயா் அதிகாரிகளுடன் பேசினாா்.
அப்போது அவா், மணிமுத்தாறு 3,4ஆவது ரிச் கால்வாய்களில் விவசாயிகளின் நலன் கருதி தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினாா்.
அவருடன், தூத்துக்குடி மாவட்ட கடலை மற்றும் வாழை விவசாயிகள் சங்கத் தலைவா் முருகேசன், தூத்துக்குடி மாவட்டஅதிமுக அவைத் தலைவா் திருப்பாற்கடல், ராமஜெயம், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியச் செயலா் காசிராஜன், ஆழ்வாா்திருநகரி மேற்கு ஒன்றியச் செயலா் ராஜ் நாராயணன், சாத்தான்குளம் ஒன்றியச் செயலா் அச்சம்பாடு சௌந்தரபாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.