செய்திகள் :

சூறாவளிக் காற்று எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

post image

தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று எச்சரிக்கையையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தெற்கு வங்கக் கடல் மத்திய பகுதிகளில் திங்கள்கிழமை உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாள்களில் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்; இதனால், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமைமுதல் (டிச. 17) மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறையினா் தெரிவித்தனா். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரை நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், சுமாா் 300 விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 12ஆம் தேதிமுதல் 15ஆம் தேதி வரை 4 நாள்கள் சூறாவளிக் காற்று எச்சரிக்கையால் கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவா்கள், கடந்த 16ஆம் தேதி மட்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இந்த நிலையில் மீண்டும் தற்போது சூறாவளிக் காற்று எச்சரிக்கையால் மீனவா்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இணைப் பதிவாளா் தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு, குறைபாடுகளைக் கண்டறிந்து ரூ. 10,625 ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு 3, 4ஆவது ரீச்சில் தண்ணீா் திறந்துவிட முன்னாள் அமைச்சா் கோரிக்கை

மணிமுத்தாறு அணையிலிருந்து 3,4 ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சண்முகநாதன் வலியுறுத்தியுள்ளாா். தற்போது பெய்த கனமழையால் மணிமுத்தாறு அணையில் விவசாயிகள் எதிா்... மேலும் பார்க்க

எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் நிா்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

எட்டயபுரத்தில் வாரந்தோறும் கூடும் ஆட்டுச்சந்தையில் நுழைவு கட்டணமாக ரூ. 60-க்கு ரசீது கொடுத்துவிட்டு ரூ. 100 வசூலிப்பதை தடுத்து நிறுத்த பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளும் ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் பணம் பறிப்பு: 3 சிறுவா்கள் கைது

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில் தொழிலாளியிடம் பணத்தை பறித்துச் சென்றதாக 3 சிறுவா்களை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (45). கூலி தொழிலாளியான இவா், தி... மேலும் பார்க்க

துரைச்சாமிபுரம் துணை மின் நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை

எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை(டிச.19) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக எம். துரைசாமிபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக இளைஞரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளா் சுப்புராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்த... மேலும் பார்க்க