செய்திகள் :

இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட்! பும்ரா-ஆகாஷ் வேகத்தில் ஆஸி. அணி திணறல்!

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா சிறப்பாக விளையாடினர். ராகுல் 84 ரன்களுக்கும் ஜடேஜா 77 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

ஆட்டத்தின் பல்வேறுமுறை மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இறுதியில் பும்ரா (10)- ஆகாஷ் தீப் (27) கூட்டணி அதிரடியாக விளையாடியதால் ஃபாலோ ஆன் தவிர்க்கப்பட்டது.

252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இன்று(டிச.18) ஆட்டம் தொடங்கியதும் 4 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

டிராவிஸ் ஹெட்டின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 31 ரன்களில்ல் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

2-வது இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தனர். பும்ரா - ஆகாஷ் தீப் வேகத்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொட... மேலும் பார்க்க

நியூஸி. அணியின் புதிய கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!

நியூசிலாந்தின் டி20, ஒருநாள் கேப்டனாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து பதவி விலகிய கேன் வில்லியம்சனுக்குப் பதில... மேலும் பார்க்க

பும்ரா - ஆகாஷ் தீப் வேகத்தில் வீழ்ந்தது ஆஸி.! இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445க்கு ஆல் அவுட்டானது. நான்காவது நாள் தொடக்கத்தில் ரோஹித் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் - ஜடேஜா... மேலும் பார்க்க

ஹேலி மேத்யூ அதிரடி: மே.இ.தீவுகள் அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நவி மும்பையில் டிஒய் பாட்டீல் மைதானத்தி... மேலும் பார்க்க

சதமடித்தவருக்கு அறிவுரை ஏன்? கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆவேசம்!

விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கோலிக்கு மட்டும் அறிவுரை கூறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விராட் கோலி சமீபத்தில் பெரும்பாலான போட்டிகளில் ஆஃப் - சைடு செல்லும் பந்தினை கவர... மேலும் பார்க்க

ஆப்கன் - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து!

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி: மழையால் ரத்து செய்யப்பட்டது.ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ... மேலும் பார்க்க