செய்திகள் :

``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு!

post image

நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்தது. அப்போது ராஜ்யசபாவில் பேசிய அமித் ஷா, ``அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான விதி 368-ல் உள்ளது. தன்னை 'யுவா' (இளைஞர்) என்று அழைத்துக்கொள்ளும் 54 வயதான தலைவர், நாங்கள் இதை மாற்றுவோம் என்று கூறிக்கொண்டு, அரசியலமைப்புடன் சுற்றித் திரிகிறார். அரசியலமைப்பை திருத்துவதற்கான ஏற்பாடு நமது அரசியலமைப்பிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா

காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்து அரசியலமைப்பில் 77 மாற்றங்களைச் செய்தது. பா.ஜ.க 16 ஆண்டுகள் ஆட்சி செய்து 22 மாற்றங்களை மட்டுமே செய்துள்ளது. ஆனால் விளைவு என்ன? மாற்றங்களைச் செய்ததன் நோக்கம் என்ன? ஜனநாயகத்தை வலுப்படுத்துவதா அல்லது அதிகாரத்தில் நிலைபெறுவதற்காக மாற்றப்பட்டதா? ராகுல் காந்தி கொண்டு சென்ற அரசியலமைப்பின் நகல் 'போலி'. அது வெற்று நகல் என்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கிறது என்ற கூற்றுக்கள் ஒரு அரசியல் வித்தை மட்டுமே. கடந்த 75 ஆண்டுகளில், அரசியல் சாசனத்தின் பெயரால் காங்கிரஸ் மோசடி செய்தது. அவர்கள் கட்சியை மட்டும் தங்களின் தனிப்பட்ட சொத்தாக கருதாமல், அரசியல் சாசனத்தை தங்கள் 'தனியார் சொத்தாக' கருதுகிறார்கள்" என்றார்.

``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.... மேலும் பார்க்க

Ambedkar: ``அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்; காங்கிரஸ் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாக்கைப் பிளப்பது, eye tattoo; ஜென் Z-ன் அலங்கார மோகம்... ஆபத்தை அறிவார்களா?

Doctor Vikatan: திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் நடத்தி வந்த டாட்டூ ஸ்டூடியோவில், நண்பருக்கு நாக்கைப் பிளவுபடுத்தும் சிகிச்சையைச் செய்ததாகவும் கண்களுக்குள் டாட்டூ போட்டுவிட்டதாகவும்செய்தி வந்த... மேலும் பார்க்க

Health: தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

முக்கனியில் ஒன்றான வாழையில் எண்ணிலடங்காத சத்துகள் உள்ளன. வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் உண்மை. ஆனால், இந்த வாழை... மேலும் பார்க்க

One Nation One Election மசோதாவுக்கே 2 விதமான வாக்கெடுப்பு? | சிக்கலில் இரட்டை இலை? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது! * மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகள்! * தேர்தலை எதிர்கொள்ளத் தெரியாமல்... வாக்கு இயந்திரத்த... மேலும் பார்க்க

`விருப்ப நாடுகள்' பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய சுவிஸ்... என்ன காரணம்.. இதனால் என்ன இழப்பு?

கடந்த வாரம், மிக விருப்பமான நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கி உள்ளது சுவிட்சர்லாந்து. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மிக விருப்பமான நாடுகளின் பட்டியல் ... மேலும் பார்க்க