செய்திகள் :

Ambedkar: ``அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" -அமித்ஷாவின் விமர்சனம்; காங்கிரஸ் பதில்!

post image

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற விவாத்தத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர்.... அம்பேத்கர்... அம்பேத்கர்.... அம்பேத்கர்.... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்.

அமித் ஷா - அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் மோடி

அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சிதான். ஆனால் அவரின் உண்மையான உணர்வுகள் குறித்தும் கட்சி பேச வேண்டும்" என எதிர்க்கட்சிகளை சாடினார். அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, `` மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை" என எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``உள்துறை அமைச்சர் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானவர்கள் என்பதையும், அவர்களின் முன்னோர்கள் அசோக் சக்ராவை எதிர்த்தார்கள் என்பதையும், சங்கபரிவார் இந்திய அரசியலமைப்பிற்குப் பதிலாக மனுஸ்மிருதியை முதல் நாளிலிருந்தே அமல்படுத்த விரும்பினர் என்பதையும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதை அம்பேத்கர் அனுமதிக்கவில்லை என்பதால்தான் அவர்மீது இவ்வளவு வெறுப்பு. மோடி அரசின் அமைச்சர்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் கடவுளுக்குக் குறைவானவர் அல்ல... தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழைகளின் தூதராக அவர் என்றும் இருப்பார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், `` அமித்ஷா கருத்துகள் மிகவும் அருவருப்பானது. அம்பேத்கர் மீது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கொண்டுள்ள வெறுப்பை இது காட்டுகிறது. அவரது பெயரைக் கேட்டாலே கூட அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. யாருடைய முன்னோர்கள் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவபொம்மைகளை எரித்தார்களோ, அவர்கள்தான் இப்போது அம்பேத்கர் கொடுத்த அரசியல் சாசனத்தை மாற்றுவது குறித்தும் பேசிவருகிறார்கள். அதற்காக மக்கள் பாடம் கற்பித்ததால், தற்போது பாபா சாகேப் பெயரைக் கூறுபவர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். வெட்கக்கேடு! இதற்காக அமித் ஷா நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ``அமித் ஷா, உங்களுக்குத் தெரியாவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது... பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கடவுளுக்குச் சமமானவர். அவர் உருவாக்கிய அரசியலமைப்பு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் புனித நூல். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம்? ?. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீதான பா.ஜ.க-வின் வெறுப்பு எப்போதுமே நன்கு அறியப்பட்டதாகும்.

கேசி வேணுகோபால்

மேலும் இன்று ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சரின் பரிதாபகரமான அறிக்கை, அவர்கள் டாக்டர் அம்பேத்கரை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. சாதிவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ், அவர்களின் மனுஸ்மிருதியால் முன்வைக்கப்பட்ட கொடூரமான கருத்துக்களை நிராகரித்த அம்பேத்கரை மனுஸ்மிருதியை வழிபடுபவர்கள் எப்போதும் தூற்றுவார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``விஜய் மல்லையா சொத்தை விற்றதில் வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி திரும்பியது'' - நிர்மலா சீதாராமன்

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டும், கேள்வி எழுப்பப்பட்டும் வருகிறது.... மேலும் பார்க்க

``தன்னை இளைஞர் என்று சொல்லும் 54 வயதான தலைவர்.." - நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு!

நடந்துவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்தது. அப்போது ராஜ்யசபாவில் பேசிய அமித் ஷா, ``அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமை... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாக்கைப் பிளப்பது, eye tattoo; ஜென் Z-ன் அலங்கார மோகம்... ஆபத்தை அறிவார்களா?

Doctor Vikatan: திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் நடத்தி வந்த டாட்டூ ஸ்டூடியோவில், நண்பருக்கு நாக்கைப் பிளவுபடுத்தும் சிகிச்சையைச் செய்ததாகவும் கண்களுக்குள் டாட்டூ போட்டுவிட்டதாகவும்செய்தி வந்த... மேலும் பார்க்க

Health: தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

முக்கனியில் ஒன்றான வாழையில் எண்ணிலடங்காத சத்துகள் உள்ளன. வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் உண்மை. ஆனால், இந்த வாழை... மேலும் பார்க்க

One Nation One Election மசோதாவுக்கே 2 விதமான வாக்கெடுப்பு? | சிக்கலில் இரட்டை இலை? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது! * மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்விகள்! * தேர்தலை எதிர்கொள்ளத் தெரியாமல்... வாக்கு இயந்திரத்த... மேலும் பார்க்க

`விருப்ப நாடுகள்' பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய சுவிஸ்... என்ன காரணம்.. இதனால் என்ன இழப்பு?

கடந்த வாரம், மிக விருப்பமான நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கி உள்ளது சுவிட்சர்லாந்து. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மிக விருப்பமான நாடுகளின் பட்டியல் ... மேலும் பார்க்க