விஎச்பி விழாவில் நீதிபதி சர்ச்சை பேச்சு: உச்சநீதிமன்ற கொலீஜியம் எச்சரிக்கை!
ராணுவ சோதனை: ஆயுதங்கள், போதைப்பொருள் பறிமுதல்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் மாநிலக் காவல்துறையோடு இணைந்து இந்திய ராணுவம் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள், அதன் தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய ராணுவம் சார்பில் அமைக்கப்பட்ட சினார் படையினர் மற்றும் அம்மாநில காவல்துறையினர் இணைந்து நேற்று (டிச.17) குப்வாரா மாவட்டத்திலுள்ள தங்கதார் கிராமத்தின் அம்ரோஹி பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த சோதனையில், 4 கைத்துப்பாக்கிகள் அதற்கான தோட்டாக்கள் மற்றும் 4 கிலோ அளவிலான போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, கடந்த டிச.11 அன்று அம்மாவட்டத்தின் பரமுல்லா-ஹண்த்வாரா சாலையில் ஐ.இ.டி எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று, சினார் படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.