செய்திகள் :

Priyanka Gandhi: `பாலஸ்தீனம்.. வங்காளதேசம்' - பேசுபொருளாகும் பிரியங்காவின் `ஹேண்ட்பேக்' - காரணமென்ன?

post image
தற்போது நடந்து வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பல ஹாட் டாப்பிக்குகளில் 'பிரியங்கா காந்தியின் ஹேண்ட் பேக்'குகளும் ஒன்று.

பாலஸ்தீனம்...

நேற்று முன்தினம், குளிர் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நாடாளுமன்றத்திற்கு வந்த வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, 'பாலஸ்தீனம்' என்று அச்சிடப்பட்ட ஹேண்ட் பேக்குடன் வந்தார்.

'காங்கிரஸ் ஒரு புதிய முஸ்லிம் லீக்', 'ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்தி பெரிய பேரழிவு', 'முட்டாள்தனம்' என்பது போன்ற பிரியங்கா காந்திக்கு எதிராக பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது பா.ஜ.க.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் இன்னும் முடிவில்லாமல் போய் கொண்டிருக்கிறது. இந்தியா எந்த நாட்டின் பக்கமும் சேராமல் 'போர் கூடாது' என்ற குரலுடன் நடுநிலையாக நிற்கிறது. இந்த நிலையில், பிரியங்கா காந்தி அந்த ஹேண்ட் பேக்குடன் வந்தது தான் பா.ஜ.க-வின் கடுமையான விமர்சனங்களுக்கு காரணம்.

பாலஸ்தீனம்...

ஆணாதிக்க மனநிலை

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, "இது தான் பா.ஜ.க-வின் ஆணாதிக்க மனநிலை. நான் என்ன அணிய வேண்டும் என்பதை யார் முடிவு செய்ய வேண்டும்?

ஆணாதிக்க மனோபாவம் தான் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்யும். இந்த மாதிரியான மனோபாவத்தை நான் பின்பற்ற மாட்டேன். எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதைத்தான் அணிவேன்" என்று பேசினார்.

புதிதல்ல...

ஆனால், பிரியங்கா காந்தி பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைபாட்டை எடுப்பது புதிதல்ல.

கடந்த ஜூன் மாதம், இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் பலி எண்ணிக்கை அதிகரித்தபோது தனது எக்ஸ் பக்கத்தில், "வெறுப்பு மற்றும் வன்முறையை விரும்பாத இஸ்ரேல் குடிமக்கள் உள்ளிட்ட சரியாக யோசிக்கும் அனைத்து குடிமக்கள் மற்றும் அரசுகளும் இஸ்ரேல் அரசின் இந்த இன படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் மற்றும் அவர்களை இதை நிறுத்த வைக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த வாரம், பாலஸ்தீன தூதரகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் பிரியங்கா காந்தியை அவரது வீட்டில் சந்தித்து வயநாட்டில் அவர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், பிரியங்கா காந்தியிடம் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரை முடிவு பெற இந்தியா உதவ முன்வர வேண்டும் என்று பாலஸ்தீன தூதரக அதிகாரி கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

பிரியங்கா

வங்காளதேசம்...

பிரியங்காவும் இதற்கு முன்பு பலமுறை இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரை நிறுத்த குரல் கொடுத்துள்ளார். ஆனால், பிரியங்கா காந்தியின் 'பாலஸ்தீன ஹேண்ட் பேக்' பெரும் பேசுபொருளாக, அடுத்த நாளும் பிரியங்கா காந்தியின் ஹேண்ட் பேக் பேசுபொருளாக தொடர்ந்தது. ஆனால், இந்த முறை (நேற்று) அவரது ஹேண்ட் பேக்கில் 'வங்காள தேசத்திற்கு' ஆதரவான வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

இதற்கு ஆளும் கட்சி வாக்குகளுக்காகவே பிரியங்கா காந்தி இந்த மாதிரியான விஷயங்களை செய்கிறார் என்று குற்றம்சாட்டியது.

இதற்கு பதிலடியாக, "இந்த மாதிரி தேவையில்லாத விஷயங்களை அரசு பேசிக்கொண்டு இருக்காமல், இந்து மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வங்காளதேசத்தில் நடக்கும் வன்முறை குறித்து பேச வேண்டும். வங்காளதேச அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதுதான் பிரியங்கா காந்திக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முதல் கூட்டத்தொடர். இந்தக் கூட்டத்தொடரிலேயே அவருடைய பேச்சு மிகவும் கவனிக்கப்படுகிறது மற்றும் இவருக்கு எதிரான விமர்சனங்களும் கூடிக்கொண்டு போகிறது.

`பாரம்பர்ய அடையாளத்தை பாழ்படுத்திட்டாங்க!' - ஊட்டி மலை ரயில் நிலை புனரமைப்பு சர்ச்சை!

நீலகிரியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை தொடங்கப்பட்ட மலை ரயில் சேவை நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் நீலகிரி மலை... மேலும் பார்க்க

Kasima: எழுந்த விமர்சனங்கள்; காசிமாவிற்கு பரிசுத்தொகையை அறிவித்த தமிழக அரசு

காசிமாவிற்கு தமிழக அரசு பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறது.உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்த மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்... மேலும் பார்க்க

Ambedkar: ``டூரிஸ்ட் கைடு வேலை பார்க்காமல் உள்துறை பொறுப்பை பாருங்கள்!" - அமித் ஷாவை சாடும் உதயநிதி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறி... மேலும் பார்க்க

Ambedkar: `பாவங்கள் செய்பவர்கள்தான்...' - அமித் ஷாவின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விவாத்தத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்ப... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `மாநகராட்சி கூட்டரங்கிற்கு கருணாநிதி பெயரா?' - கொதிக்கும் அதிமுக சீனிவாசன்!

திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம், மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. இதில், `மாநகராட்சிக்கு ஆத்தூர் நீர்த்தேக்க தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. வரும் நீரும் கலங்கலாக வருகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் கி... மேலும் பார்க்க

'அதனால்தான் 800 பயணிகளின் உயிரைக் காப்பற்ற முடிந்தது' - ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் எக்ஸ்க்ளூஸிவ்

ரயில்வே ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறையை சேர்ந்த சிறந்த பணியாளர்களைத் தேர்வு செய்து 'அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்' (Ati Vishisht Rail Seva Puraskar) என்ற வ... மேலும் பார்க்க