பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு!
நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலையிலான மகாயுதி கூட்டணியால் மகா விகாஸ் அகாடி தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு மகாராஷ்டிரத்தில் உள்ள ஃபால்டானைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுடன், விதான் பவனில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.
மேலும் சரத் பவாருடன் வந்த இரண்டு விவசாயிகள் தோட்டத்தில் வளர்ந்து மாதுளைப் பெட்டி ஒன்றையும் பிரதமருக்கு வழங்கினார்.