Why aren't Rashmika, Sreeleela, and Krithi doing Kannada films? | Upendra | Cool...
சிவகார்த்திகேயன் ஆக ஆசைப்படும் முத்துக்குமரன்: ஹீரோயின் செளந்தர்யா !
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் செளந்தர்யாவிடம் எதிர்கால கனவு குறித்து முத்துக்குமரன் கேட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கு செளந்தர்யா கூறிய பதிலை, முத்துக்குமரன் சாச்சனாவிடம் கூறிய பதிலுடன் ஒப்பிட்டு இணையத்தில் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
நம்பிக்கையான போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நம்பிக்கை மிகுந்த போட்டியாளராக முத்துக்குமரன் அறியப்படுகிறார். அவரின் தெளிவான பேச்சினாலும், போட்டியின் போக்கை கணித்து விளையாடுவதிலும் சிறப்பாக செயல்படுவதால், மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார்.
இதன்விளைவாக பலமுறை நாமினேஷன் பட்டியலில் (பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களின் பட்டியல்) இடம்பெற்றும் மக்கள் வாக்குகளால் பிக் பாஸ் வீட்டில் நீடித்து வருகிறார்.
இதனிடையே முத்துக்குமரன் நடிகை செளந்தர்யாவிடம் எதிர்கால கனவு குறித்து கேட்கிறார். இதற்கு பதிலளித்த செளந்தர்யா, சினிமாவில் நடிகை ஆக வேண்டும் என தனது கனவு எனக் கூறுகிறார். அதற்காக முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் செளந்தர்யா குறிப்பிடுகிறார்.
இதனிடையே சாச்சனா, முத்துக்குமரன் தனது எதிர்கால கனவு குறித்து ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் கேட்டுள்ளார். தனக்கு சிவகார்த்திகேயன் போன்று ஃபேமிலி என்டர்டெயினர் ஆக வேண்டும் என்றும், அவரைக் கடந்து செல்ல வேண்டும் எனவும் கூறுகிறார்.
செளந்தர்யா கூறியதையும் முத்துக்குமரன் கூறியதையும் ஒப்பிட்டு ரசிகர்கள் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
எதற்கு ஆசைப்பட்டாலும் பெரிதாக ஆசைப்பட வேண்டும் என முத்துக்குமரன் ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் ஆசையும் பெரிதாக இருப்பதாக ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதேபோன்று எதிர்மறையான கருத்துகளையும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!