செய்திகள் :

ஐபிஎல் மூலம் அஸ்வினுக்கு ரூ. 97.2 கோடி!!

post image

கிரிக்கெட் வீரர் அஸ்வினின் ஐபிஎல் போட்டிகளின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

2011 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 2024 ஆண்டு தகவலின்படி, இவரது நிகர சொத்து மதிப்பு ரூ. 132 கோடி வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் 2008 ஆம் ஆண்டு முதல் வரவிருக்கும் 2025 ஆண்டுவரையில் ஐபிஎல் ஆட்டங்கள் மூலம் கிடைத்த சம்பளங்கள் குறித்த விவரங்கள்: 2008 முதல் 2010 வரையில் சென்னை அணிக்காக ரூ. 12 லட்சம் சம்பளம் வாங்கினார்; தொடர்ந்து சென்னை அணியிலேயே இருந்து வந்த அஸ்வின், 2011 முதல் 2013 வரையில் ரூ. 3.91 கோடியும், 2014 ஆண்டில் ரூ. 7.50 கோடியும் வாங்கினார்.

இதையும் படிக்க:3ஆவது இடத்தில் இந்தியா: டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

இதனைத் தொடர்ந்து, 2016 - 17 ஆம் ஆண்டில் புணே அணிக்காக விளையாடிய அஸ்வின், அங்கும் ரூ. 7.50 கோடியே வாங்கினார். 2018 - 19ல் பஞ்சாப் அணியில் ரூ. 7.60 கோடியும், 2020 - 21ல் தில்லி அணியிலும் ரூ. 7.60 கோடியே வாங்கினார். தொடர்ந்து, 2022 முதல் 2024 வரையில் ராஜஸ்தான் அணியில் இருந்த அஸ்வின், ரூ. 5 கோடி பெற்று வந்தார்.

இந்த நிலையில், வரவிருக்கும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் மீண்டும் சென்னை அணியிலேயே விளையாடவிருக்கும் அஸ்வின், இந்த முறை ரூ. 9.75 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இவர், இதுவரையில் ஐபிஎல் சீசன் மூலம் பெற்றுள்ள மொத்த சம்பளம் ரூ. 97 கோடியே 24 லட்சம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அதிகபட்சமாக 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார்.

மைந்த்ரா, பாம்பே ஷேவிங் கம்பெனி, மன்னா ஃபுட்ஸ், அரிஸ்டோக்ராட் பேக்ஸ், ஓப்போ, மூவ், ட்ரீம் 11 முதலானவற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமும் அஸ்வின் சம்பாதித்து வருகிறார்.

லாபதா லேடீஸ் ஈட்டிய வருவாய் இவ்வளவா?

லாபதா லேடீஸ் திரைப்படம் ஈட்டிய வருவாய் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.நடிகா் ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியுடன் ரோஜா தொடர் நாயகன்! புதிய படமா?

ரோஜா தொடரின் நாயகன் சிபு சூர்யன், நடிகர் விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. ரோஜா தொடர் முடிந்த பிறகு வேறு எந்தவொரு தொடர்களிலும் சிபு சூர்யன் நடிக்க ஒப... மேலும் பார்க்க

பிக் பாஸ் வெற்றியாளர் யார்? வெளியேறிய சாச்சனா பதில்

பிக் பாஸ் வெற்றியாளர் யாராக இருக்கக் கூடும் என்பது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை சாச்சனா பதிலளித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் போட்டியாளர்களில் ஒர... மேலும் பார்க்க

இயக்குநர் பாலாவின் வெள்ளிவிழாவில் சூர்யா!

நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவின் திரையுலக வெள்ளிவிழாவில் கலந்துகொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வணங்கான் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக இயக்குநர் ப... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: முதல்முறையாக... ரஞ்சித்துக்கு எதிராக மாறிய ஜெஃப்ரி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித்துக்கு எதிராக ஜெஃப்ரி பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.பிக் பாஸ் வீட்டில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படும் நபர்களில் ரஞ்சித்தும் ஒருவர... மேலும் பார்க்க

'நான் பேசமாட்டேன், என் படம் பேசும்’: மோகன்லால்

நடிகர் மோகன்லால் தன் பரோஸ் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் ஆண்டிற்கு இரண்டு பெரிய படங்களிலாவது நடிப்பவர். பெரும்பாலும் அவை வெற்றிப்படங்களாகவும் அமைந்துவ... மேலும் பார்க்க