ரஷியாவில் புற்றுநோய் தடுப்பு மருந்து தயார்! இலவசமாக வழங்கவும் திட்டம்
உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித் ஷா கவனிக்க வேண்டும்: உதயநிதி
டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா கவனிக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றரை மணி நேரம் பேசியிருந்த உரை கடும் பேசுபொருளாகி, இன்று நாடு முழுவதும் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதையும் படிக்க: முகமூடி கிழிந்தது! மதவெறிக் கட்சியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? மமதா
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்!
வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.