செய்திகள் :

BB Tamil 8 Sachana: ``முத்துக்குமரன்தான் டைட்டில் வின்னர்''- அடித்துச் சொல்கிறார் சாச்சனா

post image
கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் வீட்டிலிருந்து டபுள் எவிக்‌ஷனாக இரண்டு நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

அதில் முதல் வார டபுள் எவிக்‌ஷனில் ஆனந்தியும் சாச்சனாவும் வெளியேறி இருந்தார்கள். சாச்சனா பிக் பாஸ் வீட்டிற்குச் சென்ற முதல் நாளிலேயே வெளியேறியவர். அதன் பிறகு டிவிஸ்ட்டாக மீண்டும் வீட்டிற்குள் ரீ - என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 60 நாட்கள் வீட்டிற்குள் தாக்குப் பிடித்தவர் முதல் வார டபுள் எவிக்‌ஷனில் வெளியேறினார். அவர் இன்று விஜய் டி.வி-யின் சமூக வலைதளப் பக்கத்துடன் இணைந்து லைவ்வில் பேசியிருக்கிறார்.

பிக் பாஸ் பார்வையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சாச்சனா, `` வெளில இப்படியான அளவுக்கு வரவேற்பு இருக்கும்னு நான் எதிர்பார்க்கல. நான் பக்கத்துல ஒரு கோவிலுக்கு போனால்கூட என்கிட்ட வந்து பேசுறாங்க. நேத்துகூட ஒரு அம்மா என்கிட்ட வந்து நல்லா விளையாடினதாகச் சொன்னாங்க. நெகடிவ் விமர்சனங்களும் இருக்கும். நான் நேர்மறையான விஷயங்களை மட்டும் எடுத்துகிறேன். கண்டிப்பாக முத்துக்குமரன் அண்ணா ஃபைனல்ஸ் போவாரு. எனக்கு முத்துக்குமரன் அண்ணனுக்குப் பிறகு விஷால் அண்ணாவை ரொம்பப் பிடிக்கும்.

Sachana - Bigg Boss

அவர் வீட்டுக்க்குள்ள அமைதியாக இருக்கார்னு தெரிஞ்சது. ஆனால் வெளில வந்து பார்க்கும்போது அவர் மற்ற நபர்களைவிட அமைதியாக இருக்கிற மாதிரி தெரியுது. இந்த 63 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்ததுனால எனக்கு நல்ல அனுபவம் கிடைச்சுருக்கு. என்னுடைய வாழ்க்கையிலும் இந்த அனுபவம் ரொம்பவே எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முத்து அண்ணா ரொம்ப திறமையானவர். அவருக்கு ரொம்ப நல்ல மனசும் இருக்கு. சொல்லபோனால், அவர்தான் இந்த சீசனோட வலிமையான ப்ளேயர். ராணவ் அண்ணனோட அப்பாவித்தனம் எனக்குப் ரொம்பப் பிடிக்கும். மஞ்சரி மேம் கிட்ட நேர்மை இருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லிடுவாங்க. இப்போ நான் வெளில வந்துட்டேன். பிக் பாஸுடைய குரலை ரொம்பவே மிஸ் பண்றேன். நான் ஃபைனல்ஸ் வரைக்கும் இருப்பேன்னு நினைச்சுப் பார்க்கல. ஒரு கட்டம் வரைக்கும் இருப்பேன்னு நினைச்சேன்.

Sachana

ஆனால், இப்போ மக்களுக்கு பிடிக்காத ஏதோ ஒரு விஷயத்தைப் பண்ணிட்டேன். அதுனாலதான் என்னை வெளில அனுப்பிட்டாங்க. வீட்டுக்குள்ள எல்லோரும் அவங்கவங்க விளையாட்டை விளையாடுறாங்க. ஜெஃப்ரி மட்டும் கொஞ்சம் ஃபேக்காக இருக்கிற மாதிரி தெரியுது. ரஞ்சித் சார் இதுவரைக்கும் அவருடைய கேம்மை இன்னும் தொடங்கலைன்னு நான் நினைக்கிறேன்." என்றார். புதிய தொகுப்பாளர் குறித்த கேள்விக்கு, ``வச்சு செய்றாரு.சொல்லப்போனால், ஒரு பயமே எனக்கு வந்துருச்சு.இதுவரைக்கு அவருடனான ஜர்னில நான் அவர்கூட பேசுறதுக்கு பயந்தது இல்ல.ஆனால், இனிமேல் அந்த பயம் இருக்கும்னு நினைக்கிறேன்." என்றவர் `யார் இந்த சீசனின் டைட்டில் வின்னர்?' என்ற கேள்விக்கு ``முத்துக்குமரன் அண்ணன்தான்!'' எனக்கூறி முடித்துக் கொண்டார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram

BB Tamil 8: `நான் பண்ணது தப்புதான்...' - கண் கலங்கிய பவித்ரா - என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 73-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி வருகிறது.இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடு... மேலும் பார்க்க

BB Tamil 8: `இதே EVP-ல 10 வருஷத்துக்கு முன்னால நூலிழையில பிழைச்சவன் என் மகன்’ - ராணவ் அப்பா சந்துரு

எழுபது நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 8. பதினெட்டுப் போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் ஆறு போட்டியாளர்கள் இணை... மேலும் பார்க்க

BB Tamil 8: 'இந்த மாதிரி என்கிட்ட 'Attitude' காட்டாதிங்க செளந்தர்யா...'- கொதித்த முத்துக்குமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 73 -வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் டாஸ்கின்போது ராணவிற்கு அடிப்பட்டு நேற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

Anna: `கெத்தாக வந்த இசக்கி' - படிக்காத தங்கை; சுயதொழில் செய்ய வைக்க அண்ணன் செய்யும் பிளான்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `அண்ணா’ சீரியலில், சண்முகம் என்னும் கதாபாத்திரம் தன் தங்கைகளின் பிரச்னைகளை சரி செய்து அவர்களுக்காகவே வாழ்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.அண்ணா சீரியலின் நேற... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 72: விபத்தில் சிக்கிய ராணவ்; சவுந்தர்யாவின் குரூரம் - `மனிதாபிமானிகள்' அருண், பவித்ரா

‘ராணவ்விற்கு உண்மையிலேயே அடிபட்டதா அல்லது அவர் ஆடியது நாடகமா என்கிற சர்சசை இந்த எபிசோடின் ஹைலைட். இந்தச் சம்பவத்தின் மூலம் ஜெப்ரி, சவுந்தர்யா போன்றோரின் குரூரமான முகங்கள் அம்பலமானது. ஓர் அசந்தர்ப்பமான... மேலும் பார்க்க

BB Tamil 8: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராணவ்; ஸாரி கேட்க மறுக்கும் சௌந்தர்யா

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்திருக்கிறது. இன்னும் சில வாரங்களில் பைனல் வாரமே வந்துவிடும்.இதனால் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்றவர்கள் உதவியுடன் போட்டியா... மேலும் பார்க்க