BB Tamil 8: 'இந்த மாதிரி என்கிட்ட 'Attitude' காட்டாதிங்க செளந்தர்யா...'- கொதித்த முத்துக்குமரன்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 73 -வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் டாஸ்கின்போது ராணவிற்கு அடிப்பட்டு நேற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் முத்துக்குமாரன் மற்றும் சௌந்தர்யாவிற்கு இடையேயும் வாக்குவாதம் ஏற்படுகிறது. வழக்கம் போல சௌந்தர்யா முத்துக்குமரன் பேசுவதை அப்படியே செய்து காண்பிக்க கோபமான முத்துக்குமாரன் 'இந்த மாதிரி 'Attitude' என்னிடம் காட்டாதிங்க' என்று காட்டமாகி விடுகிறார்.
பிறகு ராணவ்விற்கு அடிப்பட்டது தொடர்பாக ரயான் கேள்வி கேட்கிறார். அதாவது டாஸ்க் விளையாடும் போது ஒருவருக்கு அடிபட்டுவிட்டு அவன் வலியில் துடிக்கிறான் என்றால் உடனே டாஸ்கை நிறுத்தி விடுங்கள் என்று சொல்கிறார். அதற்கு ஜாக்குலின் டாஸ்க் விளையாட வேண்டும் என்று நினைக்கிறவர்கள் டாஸ்கை விளையாடுங்கள்.
இல்லையென்றால் அடிப்பட்டவர்களைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அப்படியே போய்விடுங்கள். யாருக்கும் ரூல்ஸ் போட வேண்டாம் என்று வாக்குவாதம் செய்கிறார்.
அப்போது முத்துக்குமரன் இதில் தலையிட்டு 'யாருக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதுபோலவே செய்வோம். இந்த டாஸ்க்கில் பலருடைய உண்மையான குணங்கள் வெளியே வரும்' என்று சொல்கிறார்.