எனக்கு பயமில்லை... அஸ்வின் தலைசிறந்தவர்: ஆஸி. கேப்டன் அதிரடி!
Ambedkar: `பாவங்கள் செய்பவர்கள்தான்...' - அமித் ஷாவின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விவாத்தத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." என்றார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை" என எழுதியிருக்கிறார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமான நிலையில், தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!" எனப் பதிவிட்டிருக்கிறார்.