செய்திகள் :

Ambedkar: ``டூரிஸ்ட் கைடு வேலை பார்க்காமல் உள்துறை பொறுப்பை பாருங்கள்!" - அமித் ஷாவை சாடும் உதயநிதி

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சிதான். ஆனால், அவரின் உண்மையான உணர்வுகள் குறித்தும் பேச வேண்டும்." என்று நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.

Ambedkar - அமித் ஷா, மோடி

இதில், ``மனுஸ்மிருதியை நம்புபவர்கள் கண்டிப்பாக அம்பேத்கருடன் முரண்படுவதில் ஆச்சர்யமில்லை." என ராகுல் காந்தியும், ``அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்." என தமிழக முதல்வர் ஸ்டாலினும் பா.ஜ.க-வை சாட, மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பா.ஜ.க-வுக்கெதிராக தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். மறுபக்கம், அம்பேத்கருக்கெதிராக காங்கிரஸ் செய்த பாவங்கள் என பட்டியலிட்டு பிரதமர் மோடியும் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `` `எதற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்' என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாகப் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்குப் பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித் ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.

அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!" என்று எக்ஸ் தளத்தில் சாடியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

Ambedkar: ``எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை..!" - அமித் ஷாவை சாடிய விஜய்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவ... மேலும் பார்க்க

Ambedkar: "சங்பரிவார்கள் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்" - திருமா

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் பெயரை முன்வைத்து காங்கிரஸை சாடியிருப்பது அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பே... மேலும் பார்க்க

`பாரம்பர்ய அடையாளத்தை பாழ்படுத்திட்டாங்க!' - ஊட்டி மலை ரயில் நிலை புனரமைப்பு சர்ச்சை!

நீலகிரியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை தொடங்கப்பட்ட மலை ரயில் சேவை நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் நீலகிரி மலை... மேலும் பார்க்க

Kasima: எழுந்த விமர்சனங்கள்; காசிமாவிற்கு பரிசுத்தொகையை அறிவித்த தமிழக அரசு

காசிமாவிற்கு தமிழக அரசு பரிசுத்தொகையை அறிவித்திருக்கிறது.உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்த மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்... மேலும் பார்க்க

Ambedkar: `பாவங்கள் செய்பவர்கள்தான்...' - அமித் ஷாவின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் விவாத்தத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்ப... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `மாநகராட்சி கூட்டரங்கிற்கு கருணாநிதி பெயரா?' - கொதிக்கும் அதிமுக சீனிவாசன்!

திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம், மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. இதில், `மாநகராட்சிக்கு ஆத்தூர் நீர்த்தேக்க தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. வரும் நீரும் கலங்கலாக வருகிறது. காவிரி கூட்டுக் குடிநீர் கி... மேலும் பார்க்க