BB Tamil 8: மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராணவ்; ஸாரி கேட்க மறுக்கும் சௌ...
`விருப்ப நாடுகள்' பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய சுவிஸ்... என்ன காரணம்.. இதனால் என்ன இழப்பு?
கடந்த வாரம், மிக விருப்பமான நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கி உள்ளது சுவிட்சர்லாந்து. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மிக விருப்பமான நாடுகளின் பட்டியல் என்றால் என்ன, அது எப்படி வந்தது ஆகியவற்றை தெரிந்துகொள்ள 1994-ம் ஆண்டு பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
1994-ம் ஆண்டு, இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து இடையே 'இரட்டை வரி விதிப்பு தடுப்பு' ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துகொள்வோம். ராஜூ என்பவர் இந்தியாவில் ஒரு மெஷினை தயாரித்து சுவிட்சர்லாந்திற்கு ஏற்றுமதி செய்து, அங்கே விற்கிறார் என்று வைத்துகொள்வோம். அந்த வருமானத்திற்கு அந்த நாட்டிலேயும் வரி கட்டி, இந்தியாவிலேயும் வரிக் கட்டுவதை தவிர்ப்பது தான் இரட்டை வரி விதிப்பு தடுப்பு சட்டம். அதாவது, இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வரி சதவிகிதத்தில் சலுகைகள் கிடைக்கும்.
மிக விருப்பமான நாடுகள் பட்டியல்...
மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 'மிக விருப்பமான நாடுகள்' பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதன் படி, பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் இருக்கும் எதாவது ஒரு நாட்டிற்கு இரு நாடுகளில் ஒன்று வரி சலுகை கொடுத்தால், இன்னொரு நாடும் அதே வரி சலுகையை குறிப்பிட்ட அந்த நாட்டிற்கு தர வேண்டும். உதாரணத்திற்கு, பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் இருக்கும் பிரான்ஸுக்கு, இந்தியா 5 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கிறது என்றால், பிரான்ஸ்-க்கு சுவிட்சர்லாந்தும் 5 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்க வேண்டும்.
ஆக, இப்படி பல சலுகைகள் மிக விருப்பமான நாடுகள் பட்டியல் மூலம் கிடைக்கும்.
அப்படி என்ன சலுகைகள்?
மிக விருப்பமான நாடுகள் பட்டியலை பொறுத்தவரை, பல சலுகைகள் கிடைக்கும். முன்னர், சுவிட்சர்லாந்தின் விருப்பப்பட்டியலில் இருந்த இந்தியாவிற்கு மற்ற நாடுகளை விட குறைந்த வரி சதவிகிதம் தான் (மற்ற நாடுகள் என்றால் இந்தப் பட்டியலில் இடம்பெறாத நாடுகள்). மேலும், இந்தியாவிற்கு சுவிட்சர்லாந்தில் பரந்த மற்றும் எளிதான சந்தை இருந்தது. தற்போது சுவிட்சர்லாந்தில் இந்தியாவின் பெயரை நீக்கியதால் இந்த சலுகைகள் கிடைக்காது.
இனி என்ன நடக்கும்?
இனி இந்திய நிறுவனங்கள் மற்றும் பொருள்களுக்கு சுவிட்சர்லாந்தில் முன்பு இருந்ததை விட, அதிக வரிகள் விதிக்கப்படும். மேலும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் இந்திய டிவிடண்டுகளுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக உயரும்.
சுவிட்சர்லாந்தின் டிவிடெண்டுகளுக்கும் இந்தியாவில் இதே நிலை தான்.
'மிக விருப்பமான நாடுகள்' பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை சுவிட்சர்லாந்து நீக்கியதை தவிர, வேறு எந்த மாற்றமும் இரு நாடுகளுக்கு இடையேயான 'இரட்டை வரி விதிப்பு தடுப்பு' ஒப்பந்தத்தில் நடக்கவில்லை.
எதனால் இந்த முடிவு?
சுவிட்சர்லாந்தை பொறுத்த வரை, எந்தவொரு நாடு பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பின் உள் வந்தாலே மிக விருப்பப் பட்டியலுக்குள் வந்துவிடும்.
ஆனால், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நெஸ்லே நிறுவனத்தின் வழக்கில் கூறிய தீர்ப்பில், ஒரு நாடு கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் சேர்வதற்கு முன், இந்தியாவுடன் எதாவது ஒப்பந்தம் போட்டிருந்தால், அந்த நாடு இந்தியாவின் 'மிக விருப்பமான நாடுகள்' பட்டியலுக்கு கீழ் வராது" என்று கூறப்பட்டிருந்தது.
அப்படி அந்த சலுகையை இந்த அமைப்பில் புதிதாக சேரும் நாடுகள் இந்தியாவில் பெற வேண்டுமானால், அவர்கள் வருமான வரி சட்டம் பிரிவு 90-ன் கீழ் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
இரு நாடுகள்...
கொலம்பியா மற்றும் லிதுவேனியா நாடுகள் பொருளாதார கூட்டுறவு வளர்ச்சி அமைப்பில் சேர்வதற்கு முன்பே, இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால், இது வருமான வரியின் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படாததால், முன்பு ஒப்பந்தத்தின் படி எந்த வரி இருந்ததோ, அதே வரி தான் இப்போதும் தொடரும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், தற்போது சுவிட்சர்லாந்து இந்தியாவை 'மிக விருப்பமான நாடுகள்' பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.