அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.90-ஆக உயர்வு!
மும்பை: ஏமாற்றமளிக்கும் வர்த்தக சமநிலை தரவுகள் மற்றும் பலவீனமான உள்நாட்டு சந்தைகளால் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.90 ஆக நிலைபெற்றது.
பொருளாதாரத்தின் மந்தநிலையும், இறக்குமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளுக்கு தொடர்ந்து டாலர் தேவை குறித்த கவலைகள் காரணமாக இன்று ரூபாய் அழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிக்க: கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிவு!
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில் ரூபாயின் மதிப்பு 84.89 ஆக தொடங்கி ரூ.84.93-ஆக குறைந்தது.
இறுதியாக டாலருக்கு நிகராக 1 காசு உயர்ந்து ரூ.84.90 ஆக முடிவடைந்தது.