Vidamuyarchi: கடைசி கட்டப் படப்பிடிப்பில் விடாமுயற்சி; வெளியான புதிய லுக்
அஜித் தற்போது `விடாமுயற்சி', `குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.
`குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
அதனையொட்டி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், `` எனக்கு இப்படியான வாழ்நாள் வாய்ப்பைக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது. லவ் யூ அஜித் சார். இது அஜித் சாரின் கடைசி நாள் படப்பிடிப்பு. இதுவொரு அழகான பயணமாக எனக்கு அமைந்தது.'' என நெகிழ்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விடாமுயற்சி' திரைப்படமும் அடுத்தாண்டு பொங்கல் ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் அஜர் பைஜானில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
அதனைது: தொடர்ந்து படத்தின் மீதமுள்ள கடைசி கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என தகவல் வந்தது. தற்போது படக்குழுவே அது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. `படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. விடா முயற்சியின் பயணம் முடிவை நெருங்குகிறது' எனப் பதிவிட்டு அஜித்தின் புதிய தோற்றத்தையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். டீசரில் பார்த்த அஜித்தின் தோற்றத்திலிருந்து இந்த புதிய லுக் முழுமையாக மாறுபட்டிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் `விடாமுயற்சி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...