பாக்ஸ் ஆபிஸ் வெற்றி ரகசியம் பகிர்ந்த அட்லீ!
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.
ஹிந்தியில் ஷாருக்கானை இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தினை ஹிந்தியில் பேபி ஜான் என்ற படமாக அட்லீ தயாரித்துள்ளார்.
இப்படத்தில் நடிகர் வருண் தவான் நாயகனாகவும், நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபியும் நடித்துள்ளனர். இப்படத்தை காளிஸ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் பேபி ஜான் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அட்லீ பேசியதாவது:
என்னைப் பொறுத்தவரை மாஸ் என்பது அம்மாவின் உணர்வு, அது ஏலியன் உணர்வு அல்ல. ஒரு குழந்தைக்காக அழுத்தால் அதுதான் மாஸ். சரியான விஷயத்துக்காக கோபப்பட்டால் அதுதான் மாஸ்.
நிஜமாகவே சமூகத்துக்காக எழுந்து நின்றால் அது மாஸ். அதைத் தவிர மற்றவை மாஸ் கிடையாது. அதனால்தான் இந்த இடங்களை எல்லாம் சரியாக இருப்பதால் என்னுடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெருகிறது என நினைக்கிறேன். இதுதான் எனது தாரக மந்திரம் என்றார்.