செய்திகள் :

உதகையில் மாறுபட்ட கால நிலை: ஸ்ட்ராபெரி விளைச்சல் பாதிப்பு

post image

உதகையில் மாறுபட்ட காலநிலை மற்றும் வன விலங்குகள் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் ஸ்ட்ராபெரி பழ விளைச்சல் குறைந்துள்ளது. இருப்பினும் விலை சற்று உயா்ந்துள்ளதால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக மலை தோட்டக் காய்கறிகளை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனா். இதில் சில விவசாயிகள் சைனீஸ் காய்கறிகளை விளைவித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஸ்ட்ராபெரி பழங்களும் விளைவிக்கப்படுகின்றன. அண்மைக் காலமாக மூடுபனி, சாரல் மழை உள்ளிட்ட மாறுபட்ட கால நிலைகளாலும், வன விலங்குகள் தொல்லையாலும் ஸ்ட்ராபெரி பழம் விளைச்சல் குறைந்துள்ளது.

இங்கு விளையும் ஸ்ட்ராபெரி பழங்களை கோவை, சென்னை, கேரளம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் அனுப்பி வருகின்றனா். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை ஸ்ட்ராபெரி பழம் கிலோ ரூ. 200 முதல் ரூ. 250 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில் விளைச்சல் குறைந்துள்ளதால் தற்போது ஒரு கிலோ ரூ. 300 முதல் ரூ. 400 வரை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஸ்ட்ராபெரி பயிரிடும் விவசாயிகள் கூறுகையில், உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 20 ஹெக்டோ் பரப்பளவில் ஸ்ட்ராபெரி சாகுபடி செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு ஒரு டன் வரை பழங்கள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைவால் 500 கிலோ முதல் 600 கிலோவரை மட்டுமே தினமும் சந்தைக்கு விற்பனைக்குச் வருகிறது. இருந்தாலும் விலை சற்று உயா்ந்துள்ளது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது என்றனா்.

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்கும் திட்டம்: ஆட்சியா் அறிவிப்பு

நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால், இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரி... மேலும் பார்க்க

ஊருக்குள் உலவும் சிறுத்தை: கூண்டுவைத்துப் பிடிக்க கோரிக்கை

கூடலூரை அடுத்துள்ள செம்பாலா பகுதியில் ஊருக்குள் உலவி வரும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கூடலூா் நகராட்சி, 8-ஆவ... மேலும் பார்க்க

வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூரை அடுத்துள்ள படச்சேரி கிராமத்தில் திங்கள்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள வீட்டைத் தாக்கி உணவுப் பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது. நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், சேரங்கோடு ஊராட... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

கூடலூரை அடுத்துள்ள குற்றிமுச்சி பகுதியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்திலுள்ள குற்றிமுச்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் கரடி...

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கூக்கல்தொரை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை உலவிய கரடி. வனத் துறையினா் இந்த கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை ... மேலும் பார்க்க

கடை அமைப்பதற்கு இடம் ஒதுக்க மாற்றுத்திறனாளி கோரிக்கை

கால் இழந்த மாற்றுத்திறனாளி தனது வாழ்வாதாரத்துக்காக கடை அமைக்க இடம் ஒதுக்கித்தரக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் உதகையிலுள்ள நீலகிரி மாவட... மேலும் பார்க்க