அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி: சிவசேனை எம்எல்ஏ கட்சிப் பதவியில் இருந்து ...
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கூடலூரை அடுத்துள்ள குற்றிமுச்சி பகுதியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டத்திலுள்ள குற்றிமுச்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஸ்ரீமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ரஞ்சித், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வயநாடன் செட்டி முன்னேற்ற சங்கத் தலைவா் கனநாதன், செயலாளா் வேணுகோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.