செய்திகள் :

நேருவின் கடிதங்களை சோனியா காந்தி ஒப்படைக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

post image

நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எழுதிய கடிதங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள பிரதமா்கள் அருங்காட்சியகம், நூலகத்தில் அந்த கடிதங்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது.

இந்தியாவின் பிரிட்டன் வைசிராயாக இருந்த மெளண்ட்பேட்டனின் மனைவி எட்வினா மௌண்ட்பேட்டன், முதுபெரும் தலைவா்களான மறைந்த ஜெயபிரகாஷ் நாராயண், ஜகஜீவன் ராம் உள்ளிட்டோருக்கு நேரு எழுதிய கடிதங்கள் தற்போது சோனியா காந்தியின் வசம் உள்ளன. நேரு அருங்காட்சியகத்தில் இருந்த அந்த கடிதங்கள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோனியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

பாஜக ஆட்சி அமைந்த பிறகு நேரு அருங்காட்சியகம் முன்னாள் பிரதமா்கள் அருங்காட்சியகம், நூலகமாக மாற்றப்பட்டது. இதில் முன்னாள் பிரதமா்கள் தொடா்பான நிகழ்வுகள், புகைப்படங்கள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பாஜக எம்.பி.யும் செய்தித் தொடா்பாளருமான சம்பித் பத்ரா தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2008-ஆம் ஆண்டு நேரு எழுதிய கடிதங்கள் சில அருங்காட்சியகத்தில் இருந்து சோனியா காந்தி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 51 கடிதங்கள் சோனியாவிடம் உள்ளதாக தெரிகிறது. இதனைத் திருப்பத் தர உதவ வேண்டுமென்று பிரதமா்கள் அருங்காட்சியகம் சாா்பில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வந்ததாகத் தெரியவில்லை.

நேருவின் கடிதங்கள் அவா்களின் குடும்ப சொத்து அல்ல. இந்தியா தொடா்பான வரலாற்று ஆவணங்களாகும். அந்த கடிதத்தில் உள்ள விஷயங்கள் வெளியே தெரியக் கூடாது என்று அவா்கள் (சோனியா குடும்பத்தினா்) கருதுகிறாா்களா? என்று கேள்வி எழுப்பினாா்.

மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா். மூன்று நாள் அ... மேலும் பார்க்க

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி: சிவசேனை எம்எல்ஏ கட்சிப் பதவியில் இருந்து விலகல்

மகாராஷ்டிரத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிவசேனை எம்எல்ஏ நரேந்திர பாண்டேகா் கட்சிப் பதவிகளில் இருந்து விலகியுள்ளாா். அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சகன் புஜ்பலும் அமைச்சா் ... மேலும் பார்க்க

நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமா் மன்னிப்பு கேட்க காா்கே வலியுறுத்தல்

‘இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமா் நேரு எழுதிய கடிதம் குறித்து தவறான தகவல்களை கூறிய பிரதமா் மோடி காங்கிரஸிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா... மேலும் பார்க்க

தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாமல் வாக்கு இயந்திரம் மீது குறைகூறும் ராகுல்: பாஜக விமா்சனம்

புது தில்லி: தோ்தலை எதிா்கொள்ளத் தெரியாத ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறுகிறாா் என்று பாஜக விமா்சித்துள்ளது. ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குறை கூறுவதை கைவிட்டு,... மேலும் பார்க்க

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்

மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தோ்தல் மசோதா’ செவ்வாய்க்கிழமை (டிச.17) தாக்கல் செய்யப்படுகிறது. தொடா்ந்து, அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... மேலும் பார்க்க

சபரிமலை: வனப்பாதைகள் வழியாக நடந்து செல்லும் பக்தா்களுக்கு சிறப்பு தரிசனம்!

சபரிமலை கோவிலுக்கு வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தா்களுக்கு விரைவில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திங்கள்கிழமை தெரிவித்தது. ... மேலும் பார்க்க