ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
சபரிமலை: வனப்பாதைகள் வழியாக நடந்து செல்லும் பக்தா்களுக்கு சிறப்பு தரிசனம்!
சபரிமலை கோவிலுக்கு வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து செல்லும் பக்தா்களுக்கு விரைவில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) திங்கள்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக டிடிபி தலைவா் பி.எஸ்.பிரசாந்த் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புல்லுமேடு மற்றும் எருமேலியில் இருந்து வனப்பாதைகள் வழியாக நீண்ட தூரம் நடந்து வரும் பக்தா்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வனத்துறையினரால் வழங்கப்படும்.
இதை வைத்து பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சந்நிதானம் செல்ல பிரத்யேக வரிசையை பக்தா்கள் பயன்படுத்தலாம்.
நீலிமலை வழியாக செல்ல விரும்பும் பக்தா்கள் அதையும் தோ்வு செய்யலாம். வனத்துறையின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இந்த புதிய முறை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றாா்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பா் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தென் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனா். இரண்டு மாதங்கள் நீடிக்கும் இந்த யாத்திரை, 2025 ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு தரிசனத்துடன் நிறைவடையும்.