தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள்: மத்திய அரசு தகவல்
கடந்த நவம்பா் மாதம் வரை நாடு முழுவதும் 73 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும், தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அவை பொருத்தப்படவில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய எரிசக்தித்துறை இணையமைச்சா் ஸ்ரீபத் நாயக் மாநிலங்களவையில் அளித்துள்ள பதிலில், ‘ 19.79 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நவம்பா் 29-ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 73 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுக்கு 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை அதை பொருத்துவதற்கான பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
தமிழ்நாடு, திரிபுரா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட 11 மாநிலங்களில் ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தும் பணிகள் நடைபெறவில்லை’ என குறிப்பிடப்பட்டது.