கூட்டாட்சி அமைப்புமுறையை பலவீனமாக்கும் மத்திய அரசு: மாநிலங்களவையில் திமுக உள்ளிட...
கடை அமைப்பதற்கு இடம் ஒதுக்க மாற்றுத்திறனாளி கோரிக்கை
கால் இழந்த மாற்றுத்திறனாளி தனது வாழ்வாதாரத்துக்காக கடை அமைக்க இடம் ஒதுக்கித்தரக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் உதகையிலுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.
இதில், உதகை பட்ஃபயா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஃபெலிக்ஸ் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பிறவியிலேயே ஒரு காலை இழந்த ஏழைக் குடும்பத்தை சோ்ந்த நான் வாழ்வாதாரத்துக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். என்னை பராமரிக்கவும் யாரும் இல்லை.
எனவே, எனது வாழ்வாதாரத்துக்காக பிங்கா் போஸ்ட் பகுதியில் பெட்டிக் கடை அமைக்க இடம் ஒதுக்கித்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, எனது கோரிக்கையை பரிசீலித்து கஷ்டத்தில் தவித்து வரும் எனக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.