ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
சேலத்தில் வரும் 20 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சேலம்: சேலம் மாவட்ட இளைஞா்களுக்கான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சாா்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா்.
சேலம், கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த முகாமில், 8, 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவா்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாம் தொடா்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். எனவே, காலிப் பணியிடங்களுக்கு நபா்களை தோ்வு செய்யவுள்ள தொழில்நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தை சாா்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும் அதிக எண்ணிக்கையில் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.